Asianet News TamilAsianet News Tamil

Kalakand : இந்த தீபாவளிக்கு சுவையான கலாக்கந்த் செய்யலாமா?

சுவையான கலாக்கந்த் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மெல்லாம் தெரிந்து கொள்வோம்
 

How to make Kalakand in Tamil
Author
First Published Oct 22, 2022, 12:31 AM IST

தீப ஒளி திருநாளாம் தீபாவளிக்கு இன்னும் மிக குறைந்த நாட்களே உள்ளன. தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசுக்கு அடுத்த படியாக நாம் மிகவும் கவனம் செலுத்துவது என்ன தின்பண்டங்கள் நமது வீட்டில் செய்யலாம் என்று தான். வழக்கமாக செய்த பண்டங்களாக அல்லாமல் இந்த முறை கொஞ்சம் டிஃபரெண்டாக செய்ய வேண்டும், மேலும் அது அனைவருக்கும் பிடிக்கும் பண்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில், நாம் அனைவரும் விரும்பி கேட்டு சாப்பிடும் இனிப்பு வகையை தான் நாம் காண உள்ளோம். 

என்ன இனிப்பாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? சுவையான கலாக்கந்த் !!! இந்த இனிப்பை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த இனிப்பு பிடிக்கும் . 

நம்மில் அதிகமானோர் பண்டிகை தினங்களில் க்ளோப் ஜாமுன், லட்டு , முறுக்கு , அதிரசம் என்று தான் அதிகமாக செய்து இருப்பீர்கள். இந்த தீபாவளிக்கு நாம் சுவையான கலாக்கந்த் செய்து நமது வீட்டாருக்கும் , நண்பர்களுக்கும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்து அசத்துங்கள்.  இன்று நாம் சுவையான கலாக்கந்த் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மெல்லாம் தெரிந்து கொள்வோம்

தீபாவளி ஸ்பெஷல் கேரட் லட்டு ஸ்வீட்!

கலாக்கந்த் செய்ய தேவையான பொருட்கள் :

பால் – 1 .5 லிட்டர் 
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1

செய்முறை:

அடுப்பில் ஒரு சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் பால் 1.5 லிட்டர் சேர்த்து பால் பாதி அளவாக குறையும் அளவிற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும். பால் பாதி அளவாக குறைந்த பின் லெமன் பழத்தின் சாறினை சேர்த்து 5 நிமிடங்கள் வரை நன்றாக கலந்து விட வேண்டும். கலந்த பின்பு அதே பாத்திரத்தில் சர்க்கரை நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.

இந்த தீபாவளிக்கு பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

நன்றாக மிக்ஸ் செய்த பின்னர், சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். இப்போது ஒரு பெரிய தட்டில் சிறிது நெய் தடவி , அதில் இந்த பால் கலவையை ஊற்றி மூடி போட்டு மூடி சுமார் 3 மணி நேரம் அப்படியே விட வேண்டும்.

3 மணி நேரம் சென்ற பிறகு, ஒரு கத்தி கொண்டு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டீ எடுத்தால் சுவையான சுவையான கலாக்கந்த் தயார்.

Follow Us:
Download App:
  • android
  • ios