Asianet News TamilAsianet News Tamil

இந்த தீபாவளிக்கு பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

வழக்கமாக தீபாவளி அன்று நாம் வீட்டில் இனிப்பு பட்டியலில் இன்றியமையாத ஒன்றாக  க்ளோப் ஜாமுன் இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் க்ளோப் ஜாமூனை சற்று வித்தியாசமாக செய்து சுவைப்போமா?

How to make Bread gulab jamun in Tamil
Author
First Published Oct 21, 2022, 11:29 PM IST

தீபாவளி என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் ,மேலும் அனைவரும் மிகவும் குதூகலமாக இருப்போம் .ஏனெனில் தீபாவளி அன்று நமக்கு பிடித்த பல வகையான ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி சாப்பிடுவோம்

வழக்கமாக தீபாவளி அன்று நாம் வீட்டில் இனிப்பு பட்டியலில் இன்றியமையாத ஒன்றாக  க்ளோப் ஜாமுன் இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் க்ளோப் ஜாமூனை சற்று வித்தியாசமாக செய்து சுவைப்போமா?

குளோப் ஜாமுனில் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று நினைக்கிறீர்களா? பெயரை கேட்டால் உங்களுக்கே தெரியும். ஆம் இந்த தீபாவளிக்கு நாம் பிரட் வைத்து பிரெட் ட்ரை குலாப் ஜாமூன் தான் செய்ய உள்ளோம். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

தேவையான பொருட்கள்:

பால் பிரட் - 4 பீஸ் 
பால் - 1/4 கப் 
மைதா - 1 ஸ்பூன் 
ரோஸ் எசன்ஸ் - 2 ட்ராப்ஸ் 
சர்க்கரை பவுடர் - 3 ஸ்பூன்
சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

பாகு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1/4 கப் 
தண்ணீர் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர்,சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து,சர்க்கரை கரையும் வரையில் சூடேற்ற வேண்டும்.சர்க்கரை முழுதும் கரைந்து, சர்க்கரைப் பாகு கொஞ்சம் கெட்டியாக மாறும் போது அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். சர்க்கரை பாகு குளிர்ந்த பின்,அதில் சிட்டிகை குங்குமப்பூ மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தீபாவளி ஸ்பெஷல்! நமது பாரம்பரிய பலகாரம் சுவையான சுசியம் செய்யலாம் வாங்க!

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து ,பிரட்டின் ஓரங்களில் உள்ள ப்ரௌன் நிற பகுதியை வெட்டி கொண்டு,பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளை எடுத்து பாலில் நனைத்து பின் பிழிந்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பிரட் பேஸ்ட்டை ஒரு பௌலில் மாற்றி ,அதில் சிறிது மைதா மற்றும் சோடா உப்பு சேர்த்து கைகளில் ஒட்டாத வன்னம் நன்கு சாஃப்டாக பிசைந்து கொண்டு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொண்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன்,தீயினை சிம்மில் வைத்து ,செய்து வைத்ததுள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்துகொள்ள வேண்டும். அனைத்து உருண்டைகளையும் பொரித்த பிறகு, அவற்றை தயார் நிலையில் இருக்கும் சர்க்கரை பாகினில் சேர்த்து, சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். இறுதியாக அந்த உருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில் உருட்டி விட்டு வைத்துக் கொண்டால் , பிரட் ட்ரை குலாப் ஜாமூன் ரெடி!!!

Follow Us:
Download App:
  • android
  • ios