Asianet News TamilAsianet News Tamil

"இட்லி மஞ்சூரியன் " இதனை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்

 இட்லியை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட இட்லி மஞ்சூரியனை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அருமையான இட்லி மஞ்சூரியனை ஈஸியாக டேஸ்டாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Idly Manchurian in Tamil
Author
First Published Nov 27, 2022, 8:21 AM IST

வழக்கமாக இட்லி மீந்து போனால் நம்மில் பெரும்பாலானோர் அதை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் என்றாவது மீந்து போன இட்லி வைத்து மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லையா ? அப்படியெனில் இந்த பதிவு பார்த்து இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வெறும் 10 நிமிடத்தில் இதனை செய்து விடலாம். டேஸ்ட்டும் வேற லெவெலில் இருக்கும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் சூப்பராக இருக்கும்.  இட்லியை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட இட்லி மஞ்சூரியனை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அருமையான இட்லி மஞ்சூரியனை ஈஸியாக டேஸ்டாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

மீந்த இட்லி – 4
சீரகம் – 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கேப்ஸிகம் – 1/2
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 ஸ்பூன்
மல்லித்தழை-1 கொத்து 
கறிவேப்பிலை- 1 கொத்து 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

ருசியான மிளகு பூண்டு சாம்பார் !இப்படி செய்து பாருங்க-அருமையாக இருக்கும்

செய்முறை:

முதலில் மீந்து போன இட்லிகளை சிறிய அளவில் ஒரே விதமான வடிவங்களில் கத்தியால் வெட்டிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கேப்ஸிகம் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பிறகு ,வெட்டி வைத்துள்ள இட்லிகளை எண்ணெயில் போட்டு,
இட்லி துண்டுகள் பொன்னிறமாக ஆன பின் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். சீரகம் பொரிந்த பின் அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

வெங்காயம் வதங்கிய பிறகு,அதில் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து ,தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு,பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

மசாலாவில் இருக்கும் காரத் தன்மை போனதும் பொரித்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து கொஞ்சம் பிரட்டி விட்டு, 2 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios