என்ன! இட்லி மாவில் பால் பணியாரம் செய்யலாமா! வாருங்கள் பார்ப்போம்!

வாருங்கள்! இட்லி மாவு வைத்து சுவையான தேங்காய் பால் பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
 

How to make Idly Batter Paniyaram in Tamil

தினமும் மாலை நேரத்தில் பள்ளி முடித்து வரும் செல்ல குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் செய்து தரும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கிறது. வழக்கமாக புட்டு, கொழுக்கட்டை, வடை, போண்டா என்று செய்து கொடுத்து அலுத்து போனவர்கள் இப்படி பால் பணியாரம் செய்து கொடுங்க. பொதுவாக பால் பணியாரம் செய்ய வேண்டுமெனில் அரிசி ஊற வைத்து அரைத்து பின் செய்ய வேண்டும். ஆனால் இன்று நாம் வீட்டில் இருக்கும் இப்படி இட்லி மாவை வைத்து ஈஸியான அதே நேரத்தில் மிகவும் டேஸ்ட்டான பால் பணியாரம் செய்ய உள்ளோம். மேலும் இதனை தேங்காய் பால் வைத்து செய்வதால், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் அன்பு கட்டளை போடுவார்கள்


வாருங்கள்! இட்லி மாவு வைத்து சுவையான தேங்காய் பால் பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • இட்லி மாவு – 1 கப்
  • தேங்காய் – 1
  • சர்க்கரை – 150 கிராம்
  • ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
  • ஆப்ப சோடா மாவு –1/2 ஸ்பூன்
  • எண்ணெய் – 1/4 லிட்டர்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்து முருங்கை கீரை பொடி !

செய்முறை:-

முதலில் தேங்காயை துருவி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் எடுத்து அதனை வடிகட்டி ஒரு பௌலில் வைத்து கொள்ள வேண்டும். பின் தேங்காய் பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு பௌலில் இட்லி மாவு சேர்த்து அதில் சிறிது ஆப்ப சோடா மாவு மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். தேவையெனில் கொஞ்சம் பச்சரிசி மாவு சேர்த்து சற்று கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து ஒரே மாதிரியான சிறிய அளவில் உருண்டைகளாக செய்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும். இப்போது பொரித்து எடுத்த உருண்டைகளை எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்
டேஸ்ட்டான, தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios