காதலர் தின ஸ்பெஷல்- காதலை வெளிப்படுத்த எளிய வழி - சாக்லேட்! எப்படி செய்யலாம் ! பார்க்கலாம் வாங்க!

வாருங்கள்! சுவையான சாக்லேட் ரெசிபியை நமது வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Heart Chocolate Recipe in Tamil

நாளை உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப் பட உள்ளது. இதற்கு பல விதமான பரிசுகள் கொடுத்து உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். என்ன தான் வித விதமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்தாலும், நம் கைகளால் செய்து தரப்படும் சிறிய பொருளாக இருந்தாலும் அதையே நமது அன்பானவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

அந்த வகையில் இன்று நாம் சாக்லேட் ரெசிபியை நம் வீட்டிலேயே நம் கைகளால் செய்து நமது அன்பானவர்களுக்கு செய்து கொடுக்க உள்ளோம். இப்படி செய்து தரும் போது நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு, அக்கறை, பாசம், காதல் என அனைத்தையும் வெளிப்படுத்த மிக சிறந்த சூழலாக அமையும்.  

வழக்கமாக சாக்லேட்களை வெளியில் கடைகளில் இருந்து தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். மற்றவர்களுக்கும் பரிசாக கொடுத்திருப்போம். ஆனால் இன்று நாமே அதனை வீட்டில் சுலபமாக மிகக் குறைந்த நேரத்தில் செய்ய உள்ளோம்.  

வாருங்கள்! சுவையான சாக்லேட்ரெசிபியை நமது வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • மில்க்மேட் – 100 கிராம்
  • சர்க்கரை -100 கிராம்
  • கொக்கோ பவுடர் – 50 கிராம்
  • பட்டர்-2 ஸ்பூன்
  • பாப் ஸ்டிக்-தேவையான அளவு

இனி சப்பாத்தி என்றால் மட்டன் தால் தான் வேண்டும் என்று கேட்பார்கள்!

செய்முறை:

கோகோ பவ்டரை ஒரு சல்லடை வைத்து சலித்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை பொடித்து வைத்துக் கொண்டு அத்தனையும் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பான் வைத்து அது நன்றாக சூடான பிறகு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து மில்க்மேட் சேர்க்க வேண்டும். பின் அதனை நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அது முழுதும் இலகி வந்து விடும்.

மில்க் மேட் இலகி வரும் நேரத்தில் சலித்து வைத்துள்ள கோகோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் பொடித்த சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கலந்து விடும் போது மூன்றும் நன்கு கலந்து கெட்டியாக மாறத் தொடங்கும். இப்படி கெட்டியாக மாறும் பொழுது பட்டர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்..

பின் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இந்த சாக்லெட்டை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதனை இதய வடிவ சாக்லேட் மோல்டுகளில் வைத்து 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து விட்டு அதில் பாப் ஸ்டிக் சொருகி வைத்தால் சூப்பரான சாக்லேட் ரெடி! இப்படி செய்து உங்கள் பிரியமானவர்களுக்கு கொடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக காதலர் தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios