ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் க்ரீன் சிக்கன் டிக்கா! எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!
டிக்கா என்று சொல்லும் போது சிக்கன் டிக்கா, க்ரில்ட் சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன் டிக்கா என்று பல விதமான சிக்கன் டிக்காகளை வெளியில் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் டிக்கா ரெசிபிக்களில் ஒன்றான க்ரீன் சிக்கன் டிக்கா ரெசிபியை காண உள்ளோம். இந்த க்ரீன் சிக்கன் டிக்கா ரெசிபி நிறம் ,மணம் ,சுவை என்று அனைத்திலும் சூப்பராக இருக்கும்
அசைவ உணவுகளில் மட்டன்,சிக்கன்,முட்டை,மீன் என்று வகைகள் இருந்தாலும் சிக்கனுக்கு ஒரு பெரிய பட்டாளமே அடிமை என்று கூறும் அளவிற்கு அதன் சுவை இருக்கும். சிக்கன் வைத்து பிரியாணி, குருமா,ஃபிரைட் ரைஸ்,சில்லி சிக்கன், பட்டர் சிக்கன் என்று இன்னும் பல விதமான விதங்களில் சமைத்து சாப்பிடலாம். ஒவ்வொரு சிக்கன் ரெசிபியும் மிக அசத்தலான சுவையில் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு சிக்கன் ரெசிபியை காண உள்ளோம்.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் க்ரீன் சிக்கன் டிக்கா ரெசிபியை இன்று நாம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
டிக்கா என்று சொல்லும் போது சிக்கன் டிக்கா, க்ரில்ட் சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன் டிக்கா என்று பல விதமான சிக்கன் டிக்காகளை வெளியில் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் டிக்கா ரெசிபிக்களில் ஒன்றான க்ரீன் சிக்கன் டிக்கா ரெசிபியை காண உள்ளோம். இந்த க்ரீன் சிக்கன் டிக்கா ரெசிபி நிறம் ,மணம் ,சுவை என்று அனைத்திலும் சூப்பராக இருக்கும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று கூறினாலும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிதும் கூட.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
லெமன் ஜூஸ்-1/2
புதினா-2 கையளவு
மல்லித்தழை-கையளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
க்ரில் ஸ்டிக்-தேவையான அளவு
மதுரை ஸ்பெஷல் கார தோசை! இப்படி செய்தால் எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!
செய்முறை :
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் அலசி வைத்துக் கொண்டு தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு மிக்சி ஜாரில் புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை சிக்கனில் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். இப்போது சிக்கனில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
4 மணி நேரத்திற்கு பிறகு ஊறிய சிக்கனை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து க்ரில் ஸ்டிக்கில் சொருகி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஓவன் இல்லையென்றால் பானில் சிறிது நெய் சேர்த்து தீயினை சிம்மில் வைத்து சிக்கனை போட்டு வேக வைத்து எடுத்தால் அருமையான க்ரீன் சிக்கன் டிக்கா ரெடி!