மதுரை ஸ்பெஷல் கார தோசை! இப்படி செய்தால் எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!
தோசையில் பல விதங்கள் இருந்தாலும், இந்த மதுரை கார தோசைக்கென்று ஒரு தனி சுவை உள்ளது. அதனை வீட்டில் எப்படி எளிமையாக,சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நாம் அனவைரும் பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிடுவோம். இட்லியை விட பலரும் தோசையை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் தோசையை தான் அதிகமாக கேட்டு சாப்பிடுவார்கள்.
தோசையில் முட்டை தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை, அடை தோசை, மசாலா தோசை என்று இன்னும் பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் ஒரு தோசை ரெசிபியை பார்க்க உள்ளோம். தோசையில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா? மதுரை ஸ்பெஷல் கார தோசை ரெசிபியை செய்ய உள்ளோம்.
ஒவ்வொரு ஊரிலும் சில பல உணவுகள் பிரசித்தி பெற்று இருக்கும். உடுப்பி மசாலா தோசை, திருநெல்வேலி அல்வா,மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு சிக்கன்,மைசூர் மதூர் வடை என்று பல வகையான உணவு ரெசிபிக்கள் சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு உணவும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் மதுரையில் ஜிகர்தண்டா, கறி தோசை,பருத்திப்பால் எப்படி பரீட்ச்சையமோ அதே அளவிற்கு பிரசித்தி பெற்ற கார தோசை ரெசிபியை தான் காண உள்ளோம்.
இதற்கு சட்னி அல்லது சாம்பார் என்று எதுவும் தேவையில்லை. இதனை அப்படியே சாப்பிட்டு விடலாம்.இதனை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்! பின் நீங்களே இதனை அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.
தோசையில் பல விதங்கள் இருந்தாலும், இந்த மதுரை கார தோசைக்கென்று ஒரு தனி சுவை உள்ளது. அதனை வீட்டில் எப்படி எளிமையாக,சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
பழுத்த தக்காளி - 3
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பற்கள் - 5
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்-தேவையான அளவு
காரசாரமான முட்டை ரோஸ்ட்! இப்படி செய்து பாருங்க!
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் பொடியாக அரிந்த வெங்காயதாகி சேர்த்து வதக்கி விட வேண்டும்
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறிய பின் அதில் காய்ந்த மிளகாய் மற்றும் பொடியாக அறிந் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். கலவையை ஆற வைத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து அதில் மாவை தோசையாக ஊற்றிக் கொண்டு அதன் மேல் சிறிது எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள கார சட்னியை சிறிது போட்டு தோசை முழுவதும் ஸ்ப்ரெட் செய்து சட்னியின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் அருமையான மதுரை ஸ்பெஷல் கார தோசை ரெடி!