தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் என்று தினமும் செய்ததே  செய்தால் போர் அடிக்கும். ஒரு மாற்றாக காரமான மற்றும் வித்யாசமான சட்னிதான்  இன்று நாம் பார்க்க போகிறோம்.

பூண்டில் உள்ள அல்லில்சிஸ்டின் என்ற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. பூண்டு சாப்பிட்டால் இதயம் தசைகள் வலுவாகும். மேலும் இதயரத்தகுழாய்களில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. கிருமி நாசினியாக செயல்படுவதால் வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் உடலில் உள்ள ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வைத்து , நீரிழிவு நோய் தீவிரமாகாமல் காக்கும் . 

டையாசல்பைடு, செலினியம் போன்ற வேதி பொருட்கள் புற்று நோயின் தீவிரத்தன்மையை குறைத்து , கொஞ்சம் கொஞ்சமாக குணமடையச் செய்கிறது. கண்களில் ஏற்படும் கண் அழுத்த பிரச்சனையை நீக்கி கண்பார்வைத்திறனை தெளிவாக்கும். 

இவ்ளோ நன்மைகளை தரும் பூண்டு வைத்து ஒரு சூப்பரான சட்னி செய்வோம் வாங்க. 

சுவையில் ஆளை மயக்கும் மஷ்ரூம் மசாலா!-ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டேஸ்ட்ல இப்படி செஞ்சு பாருங்க.!

தேவையான பொருட்கள்:

பூண்டு 100 கிராம் 

நன்கு பழுத்த தக்காளி 3

வர மிளகாய் 10

பெருங்காய தூள் 1/2 ஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 

நல்லெண்ணெய் தேவையான அளவு 

கடுகு 1 ஸ்பூன் 

பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன் 

கருவேப்பிலை 1 கொத்து 

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவேண்டும். பின் அதே எண்ணெயில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்தனையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

குட்டிஸ் பேவரைட் பொட்டேடோ ட்ரையாங்கல் ஸ்னாக்ஸ்! எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

உரித்த பூண்டை இப்போது கடாயில் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின் மிக்சியில் பூண்டு, தக்காளி , வரமிளகாய் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பதற்கு நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் காரமான , டேஸ்டான பூண்டு சட்னி ரெடி!