இந்த வார வீக்எண்ட்டுக்கு வீடே கமகமக்கும் மீன் தொக்கு இப்படி செய்து சாப்பிடுங்க!

வாருங்கள்! காரசாரமான மீன் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Fish Thokku Recipe in Tamil

அசைவ பிரியர்களில் சிலர் கடல் வகையான மீனை விரும்பி சாப்பிடுவார்கள். மீனை பொரித்து,அல்லது குழம்பு போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்.ஆனால் இன்று மீனை வைத்து காரசாரமான தொக்கு செய்ய உள்ளோம். இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இதனை செய்யும் பொழுதே வீடு முழுவதும் மணமணக்கும். மேலும் இதனை ரசம் சாதம், சாம்பார் சாதம் ,தயிர் சாதம் போன்றவைக்கு வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் இதன் வாசனைக்கே ஒரு தட்டு சாப்பாடு அதிகமாக சாப்பிடலாம். இந்த வார வீக்எண்ட்டுக்கு இதனை செய்து அசத்துங்க!

வாருங்கள்! காரசாரமான மீன் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

முள் இல்லாத மீன் - 1/4 கிலோ
தக்காளி - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்
சோம்புத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள்-2 ஸ்பூன்
பெருங்காய தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 

 

ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு மட்டன் கீமா மோமோஸ் செய்து கொடுங்க!


செய்முறை :

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து அலசி வைத்து விட்டு ஒரே அளவில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டினை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இடித்து வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அடுத்ததாக அதில் சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து , தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கிய பிறகு அதில் வெட்டி வைத்துள்ள மீனை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்றாக வதக்கி விட வேண்டும். அனைத்தும் ஓன்றுடன் ஒன்று கலந்து தொக்கு பதத்திற்கு வந்த பிறகு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் சூப்பரான மீன் தொக்கு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios