Asianet News TamilAsianet News Tamil

நாவை சுண்டி இழுக்கும் பாறை மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க!

வாருங்கள்! சுவையான பாறை மீன் குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Fish Gravy Recipe in Tamil
Author
First Published Feb 10, 2023, 1:24 PM IST

வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டன், சிக்கன், மீன் என்று அசைவ உணவுகளை அதிகமானோர் சமைப்பார்கள். இந்த முறை வழக்கமாக செய்யும் ரெசிபிக்களை செய்யாமல் பாறை மீன் குழம்பு செய்து பாருங்கள். இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும் . இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னுமும் டேஸ்டாக இருக்கும்.

வாருங்கள்! சுவையான பாறை மீன் குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

 தேவையான பொருட்கள்:

  • பாறை மீன் - 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் - 10
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • பூண்டு - 10பற்கள்
  • துருவிய தேங்காய் - 1/2 கப்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2ஸ்பூன்
  • புளி கரைசல் - 1/2கப்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு -தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

வீடே கமகமக்கும் அரேபியன் சிக்கன் பிரியாணி செய்யலாமா!

செய்முறை:

முதலில் மீனை அலசி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,மல்லித்தழை மற்றும் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக ஸ்ப்ரெட் செய்து கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, மிளகு,சீரகம், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், சின்னவெங்காயம், மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் அரைத்த விழுதை எடுத்துக் கொண்டு அதில் புளிக்கரைசல் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்க வேண்டும். இப்போது புளிக்கரைசல் உள்ள பாத்திரத்தில் மீன் துண்டுகள், தக்காளி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து, தீயினை மிதமாக வைத்து அதனை வேக வைக்க வேண்டும். கொதித்து சற்று கெட்டியாக வரும் போது கடாயினை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான பாறை மீன் குழம்பு ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios