கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்று ஃபிர்னி ஃபலூடா செய்து சாப்பிடுங்க! எவ்ளோ செய்தாலும் பத்தவே பத்தாது.
வாருங்கள்! உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் ஃபிர்னி ஃபலூடா ரெசிபியி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ் க்ரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து கொடத்தலும் அனைத்தும் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும். குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் ஃபிர்னி ஃபலூடா ரெசிபியி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ¼ கப்
பால்- 1½ லிட்டர்
பாதாம் -10
குங்குமப்பூ- சிட்டிகை
ஏலக்காய் தூள் -2 சிட்டிகை
சர்க்கரை - 6 ஸ்பூன்
சமைத்த ஃபலூடா - 1 கப்
ரோஸ் சிரப் - 8 ஸ்பூன்
இந்த நட்சதிரத்தன்று கடன் வாங்கினால் வட்டிக்கு மேல் வட்டி குட்டி போடும்!
செய்முறை:
அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து , தண்ணீர் இல்லாமல் வடை கட்டி மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். பாதாமை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி , அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பால் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் துருவிய பாதாம் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரிசி மாவு வைத்துள்ள பௌலில் 1 கப் கெட்டியான பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 கப் கெட்டியான பால் ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ ஆகியவை சேர்த்து மிக்ஸ் செய்து விட்டு , பால் சேர்த்த அரிசி மாவை சேர்க்க வேண்டும்.
இப்போது அரிசி நன்றாக வெந்து கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கை விடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சமைத்து வைத்துள்ள ஃபலூடா சேர்த்து மிக்ஸ் செய்து விட வேண்டும். பிறகு மீதமுள்ள பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு ஃபிர்னியை ஒரு பெரிய பௌலில் மாற்றி, ஆறும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பிறகு சர்க்கரை சேர்த்து பிர்னியுடன் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது கண்ணாடி கிளாஸில் ஃபலூடாவை வைத்து அதன் மேல் ரோஸ் சிரப்பைச் சேர்த்து துருவிய பாதம் சிலவற்றை தூவி பரிமாறினால் ஃபிர்னி ஃபலூடா ரெடி!