Asianet News TamilAsianet News Tamil

ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட்க்கு ரைட் சாய்ஸ் "ராகி பூரி"! நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க!

வாருங்கள்! சத்தான, ஆரோக்கியமான ராகி பூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Finger Millet Poori  in Tamil
Author
First Published Mar 18, 2023, 9:25 AM IST


வழக்கமாக நாம் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லி,தோசை,பூரி போன்றவற்றையே கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சுவையாகவும் செய்து தந்தாலே போதும், வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுகளையும் அன்பையும் ஈஸியா பெற்றிடலாம்.
அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் ஆரோக்கியமான ஒரு பூரி ரெசிபியை தான் பார்க்க உள்ளோம்.
 

பூரியில் என்ன புதுமை? என்று யோசிக்கிறீர்களா? வழக்கமாக பூரியை நாம் கோதுமை மாவில் செய்து சாப்பிடுவோம். ஒரு சிலர் மைதா மாவினில் சையது சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் சிறுதானிய வகையான ராகி எனப்படும் கேழ்வரகு வைத்து சத்தான ராகி பூரியை தான் செய்ய உள்ளோம். ராகியை செய்யப்படுவதால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.


தவிர சிறு பிள்ளைகள், இளைஞர்கள்,வயதானவர்கள் என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவாகும். அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் இந்த ராகி உணவினை துடுது கொள்வதால் அன்றைய தினம் முழுதும் உடலுக்கு தேவையான சக்தியை நமக்கு தருகிறது.

வாருங்கள்! சத்தான,ஆரோக்கியமான ராகி பூரி ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு-1 கப்
கோதுமை மாவு -1கப்
உப்பு-சிறிது
எண்ணெய் -தேவையான அளவு
 

சத்தான கொள்ளு உருண்டை காரக்குழம்பு செய்யும் பொழுதே சும்மா வாசனை தூக்கும்!

செய்முறை :


முதலில் ஒரு விலாசமான தட்டில் ராகி கோதுமை மாவை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது சிறிது சிறிதாக ஊற்றி மாவினை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊற வைத்து விட்டு, பின் ஒரே அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் உருண்டைகளை சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அதில் தேய்த்து வைத்துள்ள பூரியை போன்று சேர்த்து இரு பக்கமும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அனைத்து பூரிகளையும் சுட்டு எடுத்துக் கொண்டால் சத்தான ராகி பூரி ரெடி! இதற்கு காரசாரமான மசாலா அல்லது கிரேவி வைத்து சாப்பிட்டால் அட்டாகாசாக இருக்கும். நீங்களும் இதனை உங்க வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். நிச்சயமாக இது அனைவருக்கும் ஏற்ற ஒரு காலை உணவாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios