ஆரோக்கிய வாழ்விற்கு சத்தான முருங்கைப்பூ ரசம் செய்து சாப்பிடலாம் வாங்க!
வாருங்கள்! சத்தான முருங்கைப்பூ ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் நாம் சாப்பிடும் மதிய உணவில் ரசம் நீங்கா இடம் பெரும். நாம் சாப்பிடும் உணவை செரிமானம் ஆவதற்கு ரசம் பெரிதும் துணை புரிகிறது. மேலும் காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்றவைக்கும் ரசம் மருந்தாக பயன்படுகிறது. ரசத்தில் மிளகு ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், தேங்காய் பால் ரசம் என்று இன்னும் பல விதங்களில் ரசத்தை செய்யலாம். ஒவ்வொரு விதமான ரசமும் தனி சுவை மற்றும் மருத்துவ குணத்தை கொண்டு இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் முருங்கைப் பூ வைத்து சத்தான ரசம் செய்ய உள்ளோம். இந்த ரசம் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வளிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதனை உணவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் அளிக்கும். மேலும் கண் பார்வை கோளாறு சரி செய்யவும், ஞயாபக சக்தியை அதிகரிக்கவும் முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது.
வாருங்கள்! சத்தான முருங்கைப்பூ ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு
- புளி-லெமன் சைஸ்
- தக்காளி-1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பூண்டு-3 பற்கள்
- பெருங்காயம்-1/4 ஸ்பூன்
- வெந்தயம்-1/4 ஸ்பூன்
- வர மிளகாய்-2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- மல்லித்தழை - கையளவு
- எண்ணெய் - தேவையான அளவு.
- உப்பு-தேவையான அளவு
ஆஞ்சேநேயர் கோவில் ஸ்பெஷல் வடை! எப்படி செய்வது ! பார்க்கலாம் வாங்க!
செய்முறை:
முதலில் முருங்கை பூவை சுத்தம் செய்து எஅலசி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொண்டு கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில், கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் மிளகு, சீரகம், வெந்தயம்,வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கி விட்டு , அலசி வைத்துள்ள முருங்கை பூ சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட்டு பின் புளிக்கரைசல் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ரசம் நுரை கோர்த்து வரும் போது சிறிது பெருங்காயம் சேர்த்து இறக்கி விட்டு இறுதியாக மல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறினால் சத்தான முருங்கை பூ ரசம் ரெடி!