குட்டிஸ்களின் ஆல் டைம் பேவரைட் டேஸ்ட்டான "தோசை சாண்ட்விச் "

வாருங்கள்! டேஸ்ட்டான தோசை சாண்ட்விச்சை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Dosa Sandwich Recipe In Tamil

இன்றைய நவீன உலகத்தில் இருக்கும் குழந்தைகள் அனைத்திலும் புதுமையானவற்றை விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக சாப்பிடும் உணவில் வெரைட்டி அண்ட் டிஃபரெண்ட்டினை விரும்புகின்றனர். எனவே நாம் தினமும் சாப்பிடும் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக மாற்றி தோசை சாண்ட்விச் செய்து கொடுத்தால் சத்தமின்றி அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

வாருங்கள்! டேஸ்ட்டான தோசை சாண்ட்விச்சை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • தோசை மாவு - 2 கப்
  • சீஸ் - 1/4 கப்
  • கேப்ஸிகம் - 1 கப்
  • வெங்காயம் - 1/4 கப்
  • க்ரீன் சட்னி - 2 ஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பட்டர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

    இனி வீட்டிற்கு கெஸ்ட் வந்தால் ஆரஞ்சு வைத்து சூப்பரான டெஸெர்ட் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!


செய்முறை:

முதலில் சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். கேப்ஸிகம் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின்பு சீரகம் சேர்த்து தாளித்து விட்டு பின் அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கி,பின் அரிந்து வைத்துள்ள கேப்ஸிகம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து கிளறி விட்டு பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்து விட வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து, அதில் தோசை மாவினை ஊத்தாப்பம் போன்று ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு தோசையின் மேல் பகுதி வெந்த பிறகு அதனை திருப்பிப் போடாமல், அதை அப்படியே எடுத்துக் கொண்டு அதில் க்ரீன் சட்னி வைத்து ஸ்ப்ரெட் செய்து அதில் வதக்கிய கேப்ஸிகம் சேர்த்து அதன் மேல் துருவி வைத்துள்ள சீஸை தூவி விட வேண்டும்.

பின்னர் மற்றொரு தோசையை எடுத்து, அதன் மேல் சிறிது க்ரீன் சட்னி வைத்து ஸ்ப்ரெட் செய்து,டாப்பிங் செய்துள்ள தோசையின் மேல் அதனை வைக்க வேண்டும்.பின் தோசைக்கல் வைத்து ரெடி செய்துள்ள சாண்ட்விச்சை வைத்து, சுற்றி பட்டர் சேர்த்து பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து விட்டு அதனை2 ஸ்லைஸ்களாக வெட்டி எடுத்தால் டேஸ்ட்டி தோசை சாண்ட்விச் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios