Asianet News TamilAsianet News Tamil

சும்மா ஒரே மாதிரி ரசம் செய்யாம ஒரு தடவ கமகமன்னு வாசனை வரும் வாழை இலை வைத்து ரசம் செய்து சாப்பிடுங்க!

வாருங்கள்! சூப்பரான வாழை இலை ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி சுவையாக செய்யலாம் என்று கொள்ளலாம்

How to make Delicious Banana Leaf Rasam
Author
First Published Apr 6, 2023, 6:45 AM IST | Last Updated Apr 6, 2023, 6:45 AM IST

நமது மதிய உணவில் எப்போதும் ரசமானது ஒரு பிரதான இடத்தை பெற்றுள்ளது. ரசம் நாம் சாப்பிட்ட உணவை செரிமானம் அடைய செய்வதில் மிக முக்கிய பணியை செய்கிறது. ரசத்தில் மிளகு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம், தூதுவளை இலை ரசம் என்று இன்னும் பல விதங்களில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.  வரிசையில் இன்று வித்தியாசமான சுவையில் வாழை இலை வைத்து ரசம் செய்ய உள்ளோம். என்ன! வாழை இலையில் ரசமா! என்று பலர் யோசிப்பார்கள். 

ஆமாங்க! வாழை இலை வைத்தும் ரசம் செய்ய முடியும் . வழக்கமாக காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றிற்கு அம்மவின் ரசம் தான் முதல் மருந்தாக இருக்கும்.அப்படியான ரசத்தை வாழை இலை வைத்துக் கூட செய்யலாம்ங்க. 

வாருங்கள்! சூப்பரான வாழை இலை ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி சுவையாக செய்யலாம் என்று கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வாழை இலை - 1
வர மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 8 பற்கள்
தக்காளி - 1
புளி - லெமன் சைஸ்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-கையளவு

தாளிப்பதற்கு:

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
பெருங்காயம்-1 சிட்டிகை

செய்முறை :

முதலில் வாழை இலையை அலசி விட்டு சிறிய அளவில் அரிந்து வைத்துக் .கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொண்டு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு ,தக்காளி மற்றும் வாழை இலையை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் கடுகு,வர மிளகாய்,கறிவேப்பிலை,பெருங்காயம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து விட வேண்டும். இப்போது அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, அடுத்தாக அதில் புளிக்கரைசல் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வியக்க வேண்டும். ஒரு பிறகு மல்லித்தழை தூவி இறக்கினால் கமகம வாசனையில் வாழை இலை ரசம் ரெடி!

Weight Loss : ஜெட் வேகத்தில் உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை தந்த குடம்புளியை இன்றே ட்ரை செய்து பாருங்க!
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios