Green Chili Alva: ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாயில் சுவையான அல்வா செய்வது எப்படி?

ஆம், பச்சை மிளகாயில் அல்வா செய்து சாப்பிடலாம். இருப்பினும், பச்சை மிளகாய் அல்வா காரமாக இருக்குமா அல்லது இனிப்பாக இருக்குமா என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு தான். அதைப் பற்றித் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.

How to make delicious alva with healthy green chillies?

பச்சை மிளகாய் என்றாலே அதன் சுவை காரமாகத் தான் இருக்கும். இருப்பினும் பச்சை மிளகாயை பலரும் விரும்பூ சாப்பிடுவார்கள். ஏனெனில், இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.  காரமாக இருக்கும் பச்சை மிளகாயில் கூட இனிப்பு வகைகளை செய்ய முடியும் என்பதை பலரும் அறிந்ததில்லை. ஆம், பச்சை மிளகாயில் அல்வா செய்து சாப்பிடலாம். இருப்பினும், பச்சை மிளகாய் அல்வா காரமாக இருக்குமா அல்லது இனிப்பாக இருக்குமா என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு தான். அதைப் பற்றித் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.

பச்சை மிளகாய் அல்வா

பச்சை மிளகாயானது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். பச்சை மிளகாயில் உள்ள இரசாயன கலவைகள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அவ்வகையில் காரம் நிறைந்த பச்சை மிளகாயைப் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் - 1 கப்
சோள மாவு - 1 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - ¼ கப்
முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு

வீட்டிற்கு வரும் கெஸ்ட்டுக்கு 10 நிமிடத்தில் இப்படி "மைதா போண்டா" செய்து கொடுத்து அசத்துங்க!

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடான பிறகு முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பச்சை மிளகாயை நீள்வாக்கில் இரண்டாக நறுக்கி, அதன் விதைகளை நீக்கி விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஏற்கனவே கொதிக்க வைத்த தண்ணீரில் உள்ள பச்சை மிளகாயை தனியே எடுத்து, இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதுபோல 3 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், பச்சை மிளகாயில் உள்ள காரத்தன்மை குறைந்து விடும். பின்னர் சூடு ஆறியதும், பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடான பிறகு அரைத்த பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கிளறி விட வேண்டும். சோள மாவை சிறிதளவு தண்ணீரில் நன்றாக கரைத்து, பச்சை மிளகாய் கலவையில் சேர்த்து, தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக கலந்து, ஓரங்களில் நெய் பிரிந்து வரும் நேரத்தில், ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றை சேர்த்து இறக்கி விட வேண்டும். இப்போது சுடசுட பச்சை மிளகாய் அல்வா தயார். இந்த அல்வா இனிப்பு மற்றும் காரச் சுவை ஆகிய இரண்டும் கலந்து மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios