Curry leaves powder : சத்தான கறிவேப்பிலை பொடியை எளிமையாக செய்யலாம் வாங்க!

வாருங்கள்! சத்தான கறிவேப்பிலை பொடியை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Curry leaves powder in Tamil

வழக்கமாக நாம் தினமும் சாப்பிடக்கூடிய உனவுகளில் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எளிமையாக அதே நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ரெசிபியை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். இன்று நாம் கறிவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு ரெசிபியை காண உள்ளோம். 

கறிவேப்பிலை வைத்து ரொட்டி , கறிவேப்பிலை குழம்பு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் கறிவேப்பிலை வைத்து சுவையான பொடியை செய்ய உள்ளோம். 

வழக்கமாக பொடி என்றால் பெரும்பாலும் பருப்பு சேர்த்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம் . இன்று நாம் சற்று வித்தியாசமாக கறிவேப்பிலையை வைத்து அருமையான பொடியை பார்க்க உள்ளோம். 

கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் இது நமது உடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் இது உடலில் இருக்கின்ற கொழுப்பை கரைக்கும் தன்மை பெற்றது.

இந்த கறிவேப்பிலை பொடியை சுட சுட சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் இதன் சுவை அமிர்தம் போல் இருக்கும். அப்பளம் ஒன்று இருந்தால் போதும் இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு . 

வாருங்கள்! சத்தான கறிவேப்பிலை பொடியை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 10
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்

Onion: வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு நல்லதாம்!

செய்முறை : 

முதலில் கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அலசி கொள்ள வேண்டும்.அலசிய கறிவேப்பிலையை தண்ணீர் இல்லாமல் நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.எண்ணெய் சூடான பின் வர மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்துக் கொண்டு அதனையும் மிளகாய் வைத்துள்ள தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் கடாயில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து பின் உலர்த்தி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொண்டு கலவையை ஆற வைக்க வேண்டும். 

பின் மிக்சி ஜாரில் வறுத்து தனியாக வைத்துள்ள வரமிளகாய், சீரகம், மிளகு, பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, பின் அதில் சிறிது உப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நைசாக வறுத்துக் கொள்ள வேண்டும். 

அவ்ளோதாங்க! சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி!!! இதனை சூடான சாதத்தில் சேர்த்து நெய்/நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios