வீட்டிலேயே செய்யலாம் - குளிர் காஃபி!

நாம் அனைவருக்கும் காலை மற்றும் மாலை வேளையில் காபி அருந்தும் பழக்கம் இருக்கும். ஒரு சிலர் காலை, மாலை அல்லாது தலை வலியில் இருந்து விடுபட , உடல் சோர்வில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற காபியை அருந்துவார்கள். 

How to make Cold Cofee in Tamil

காபியில் பல வகை உண்டு.பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி, சுக்கு மல்லி காபி , கும்பகோணம் டிகிரி காபி போன்ற வகைகளை நாம் வீட்டிலேயே செய்திருப்போம்.

இதனை தவிர்த்து எஸ்பிரெஸ்ஸோ, பிராப்பிசீனோ, கேப்பசீனோ, கோல்ட் காபி என பல வகையான காபிகளை சுவைக்க நாம் காபிகளுக்கென்றே ப்ரத்தேயமாக உள்ள சில ஷாப்களுக்கு தான் செல்வோம். அங்கே போய் பருகினால் சுவை சூப்பரா இருக்கும் ஆனால் சுவைக்கு ஏற்றார் போல் காஸ்ட்லியாவும் இருக்கும். 

அதனால் ரொம்ப காஸ்ட்லியான கோல்ட் காபியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

நா ஊரும் ஊறுகாய்! இஞ்சி பூண்டு ஊறுகாய் வீட்டிலேயே செய்வோமா?

தேவையான பொருட்கள்:

காய்த்த பால் 1/4லிட்டர் 
காபிதூள் ஸ்பூன் 1 
சர்க்கரை 5 ஸ்பூன் 
சாக்கோ சிரப் 2 ஸ்பூன் 
தண்ணீர் தேவையானஅளவு 
ஐஸ்கட்டிகள் 5
சாக்லேட் துண்டுகள் 5

செய்முறை:

முதலில் 1 ஸ்பூன் காபிதூள் எடுத்து அதனை 2 ஸ்பூன் தண்ணிரில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவேண்டும். 

அடுத்து 5 ஐஸ்கட்டிகள்,5 ஸ்பூன் சக்கரை, 2 ஸ்பூன் சாக்கோ சிரப் எடுத்துக் கொள்ளவேண்டும். 1/4 லிட்டர் காய்த்த பாலில் ஐஸ்கட்டிகளை சேர்க்கவும். மிக்ஸி ஜாரில் அந்த பாலை ஊற்றவும்.

சத்தான ஜோவர் பணியாரம் செய்யலாம் வாங்க!

பால் ஊற்றிய பிறகு கலக்கி வைத்துள்ள சக்கரை,சாக்கோ சிரப் காபிதூள் அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்க்கவும். சக்கரை நன்றாக கரையும் வரை அரைக்கவும். அரைத்த பின் ஓரங்களில் நுரை கூடி வருவதை பார்க்கலாம். 

ஒரு கண்ணாடி கிளாசின் ஓரங்களில் கொஞ்சம் சாக்கோ சிரப் ஊற்றி அரைத்த பாலை ஊற்றி, சிறிய சில சாக்லேட் துண்டுகளை மேலே தூவவும். சுவையான கோல்ட் காபி ரெடி!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios