இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான சாக்லேட் ப்ரவுனி!

வாருங்கள்! சுவையான சாக்லேட் ப்ரவுனி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Chocolate Brownie in Tamil

 

சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வயது பேதமின்றி சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் சாக்லேட்டும் ஒன்று. அப்படி சாக்லேட் மட்டுமல்லாமல் சாக்லேட் பிளேவரில் வரும் சாக்லேட் கேக், சாக்லேட் ஐஸ் க்ரீம் என்று அனைத்தும் மிக சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சாக்லேட் ப்ரவுனி ரெசிபியை காண உள்ளோம்.

வாருங்கள்! சுவையான சாக்லேட் ப்ரவுனி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • குக்கிங் சாக்லேட்-200 கிராம்
  • சர்க்கரை- 200 கிராம்
  • பட்டர்- 100 கிராம்
  • மைதா- 120 கிராம்
  • கோக்கோ பவுடர்- 4 ஸ்பூன்
  • முட்டை-3
  • முந்திரி & பாதாம்-1/4 கப்
  • வெண்ணிலா எசன்ஸ்- 1 ஸ்பூன்
  • உப்பு- 1 சிட்டிகை
  • பட்டர் பேப்பர்- தேவையான அளவு

 

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

செய்முறை:
 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் குக்கிங் சாக்லேட்டை சேர்த்து கொதிக்க வைத்து உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு விலாசமான கடாய் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பின் தீயை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் உருக்கி வைத்துள்ள குக்கிங் சாக்லேட்டை போட்டு கொதிக்கும் தண்ணீர் மேல் வைக்க வேண்டும். வைக்கவும்.

இப்போது குக்கிங் சாக்லேட்டில் பட்டர் சேர்த்து பீட் செய்ய வேண்டும். இரண்டும் நன்றாக மிக்ஸ் ஆகுமாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். இப்போது அந்த பௌலை கடாயில் இருந்து வெளியே எடுத்து மற்றொரு ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக்  கொள்ள வேண்டும். இப்போது கலவையில் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அடுத்தாக ஒரு கிண்னத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். இப்போது சாக்லேட் பட்டர் கலவையில் உடைத்த முட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தாக அதில் மைதா மாவு ,சிட்டிகை உப்பை சேர்த்து கட்டி இல்லாமல் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் பொடித்த முந்திரி, பாதாமை சேர்த்துக் கிளறி விட வேண்டும். அவனை 350 டிகிரி ஃபாரன்ஹீட் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். ஒரு ட்ரே எடுத்து அதில் சிறிது பட்டர் தேய்த்து பட்டர் பேப்பர் வைத்து இந்த கலவையை வைத்து , ட்ரேயை அவனில் வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சூடான சாக்லேட் ப்ரவுனி ரெடி!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios