Chilli Bread : சுவையான சில்லி பிரெட்!
உங்கள் வீட்டில் பிரட் இருக்கிறதா?அப்படியென்றால் அதைக் வைத்து ஒரு சுவையான ஸ்நாக்ஸை எளிமையாக வீட்டில் செய்து விடலாம்.
மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கும் மற்றும் அலுவல் பணி முடித்து வரும் பெரியவர்களுக்கும் வித்தியாசமாக என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கும் போது , நீங்கள் இந்த ருசியான ஸ்நாக்ஸை தாராளமாக செய்து தரலாம்.இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் வீட்டில் பிரட் இருக்கிறதா?அப்படியென்றால் அதைக் வைத்து ஒரு சுவையான ஸ்நாக்ஸை எளிமையாக வீட்டில் செய்து விடலாம்.
பிரட்டை வைத்து என்ன என்று யோசிக்கிறீர்களா? சில்லி பிரட் தாங்க அது .வீட்டிற்கு விருந்தினர்கள் எதிர்ப்பாராத நேரத்தில் வந்தால், இதனை உடனடியாக அவர்களுக்கு செய்து கொடுத்து , பாராட்டைப் பெறலாம். சரிங்க. இந்த சில்லி பிரட்டை எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சில்லி பிரட் செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் - 4பீஸ்
ஸ்பிரிங் ஆனியன் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக அரிந்தது )
குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக அரிந்தது)
பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக அரிந்தது )
தண்ணீர் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன் (3 காய்ந்த மிளகாயை வெண்ணீரில் ஊற வைத்து, தண்ணீர் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்தது )
செய்முறை:
முதலில் பிரட்களை எடுத்து ஒரே அளவிலான சதுர வடிவில் வெட்டி கொண்டு தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து கொண்டு அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிலேயே செய்யலாம் -பிரட் பீசா!
பின்பு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , பூண்டை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பின் இதில் டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் மற்றும் காய்ந்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து கொஞ்சம் நீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இப்போது இதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதன் மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி பிரட் தயார்!!