இனி வீட்டிலேயே செய்யலாம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் ஃபார்சர் !

வாருங்கள்! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் டேஸ்ட்டான சிக்கன் சிக்கன் ஃபார்சர் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

How to make Chicken Frazer in Tamil

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது கண்டிப்பாக சிக்கன் தான். சிக்கன் வைத்து சில்லி சிக்கன், பிரியாணி, கிரேவி, 65, மஞ்சூரியன், ஃபிரைட் ரைஸ் என்று பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் ஃபார்சா ரெசிபியை காண உள்ளோம். பொதுவாக சிக்கன் ஃபார்சாவை ரெஸ்டாரண்ட்களில் தான் நாம் சுவைத்து இருப்போம். ரெஸ்டாரண்ட் என்றால் சுவை எப்படி அதிகமோ அதே போன்று விலையும் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதால் லிமிடெட்டாக தான் சாப்பிட முடியும் அதனையே நாம் வீட்டில் செய்தால் அதிகமாக செய்து சாப்பிடலாம். மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

வாருங்கள்! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் டேஸ்ட்டான சிக்கன் சிக்கன் ஃபார்சர் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ

மசாலாவிற்கு:

லெமன் ஜூஸ் -2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

கோட்டிங் செய்வதற்கு :

முட்டை - 2
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பிரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
ண்ணெய் - தேவையான அளவு

கசப்பே தெரியாம பாகற்காய் ரசம் செய்யலாமா?

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அதனை அலசி விட்டு கொஞ்சம் ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள், கரம் மசாலா,மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதில் வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான் பின், அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கனை எடுத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி பின் அதனை முட்டையில் டிப் செய்து அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுத்தால் சிக்கன் ஃபார்சர் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios