Asianet News TamilAsianet News Tamil

முட்டை போண்டா தெரியும். இதென்ன சிக்கன் போண்டா! பார்க்கலாம் வாங்க!

வாருங்கள்! சுவையான மொறு மொறு சிக்கன் போண்டா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Chicken Bonda Recipe in Tamil
Author
First Published Feb 4, 2023, 3:23 PM IST

மாலை நேரத்தில் சுட சுட டீயும் சூடான போண்டாவும் செய்து சாப்பிட கொடுத்தால் யாரேனும் வேண்டாம் என்பார்களா? சிக்கன் வைத்து போண்டா செய்து கொடுத்தால்? இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கமாக உருளைக்கிழங்கு ,முட்டை போன்றவை வைத்து தான் போண்டா செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சிக்கன் வைத்து சூப்பரான சுவையில் சிக்கன் போண்டா ரெசிபியை காண உள்ளோம். இந்த சிக்கன் போண்டா ஒரு நல்ல வித்தியாசமான ட்ரை என்று சொல்லலாம். மேலும் இது மொறுமொறுவென்று இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவைரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

வாருங்கள்! சுவையான மொறு மொறு சிக்கன் போண்டா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

  • சிக்கன் கைமா-1/4 கிலோ
  • போண்டா மாவு - 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம்- 50 கிராம்
  • சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்
  • வர மிளகாய்-2
  • மிளகு-1 ஸ்பூன்
  • பூண்டு-5 பற்கள்
  • சோம்பு-1 ஸ்பூன்
  • பொட்டுக் கடலை-50 கிராம்
  • இஞ்சி-1 இன்ச்
  • தேங்காய் துருவல் - கையளவு
  • மல்லித்தழை - கையளவு
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

ப்ரேக்பாஸ்ட்க்கு ஹெல்த்தியான பிரண்டை தோசை சாப்பிடுங்க!


செய்முறை:

முதலில் போன்லெஸ் சிக்கனை வாங்கி சுத்தம் செய்து அலசிய பின் நன்றாக கொத்தி கைமாவாக செய்து கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் மிளகு, சோம்பு, இஞ்சி,பூண்டு, வர மிளகாய், சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு பின் அதில் அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்,பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை மற்றும் அரைத்த அனைத்து கலவைகளையும் கடாயில் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் போது அதனை ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய பௌலில் போண்டா மாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் பிடித்து சிக்கன் உருண்டைகளை பஜ்ஜி மாவில் டிப் செய்து கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பொரித்து எடுத்தால் சூடான சிக்கன் போண்டா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios