செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான இறால் சுக்கா !

வாருங்கள்! சுவையான செட்டிநாடு இறால் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Chettinad Prawn Chukka in Tamil

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக மதுரை ஸ்டைல், நெல்லை ஸ்டைல், செட்டிநாடு ஸ்டைல் என்று பல விதமான உணவு முறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படுகின்றன. அந்த விதத்தில் இன்று நாம் செட்டிநாடு முறையில் காரசாரமான இறால் சுக்கா ரெசிபியை காண உள்ளோம்.

இதனை ஒரு முறை செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் இதனையே அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். இந்த சுக்கா ரெசிபியை செய்யும் பொழுதே அனைவரும் நாவிலும் எச்சில் ஊரும் அளவிற்கு இதன் சுவையும் மணமும் இருக்கும்.

வாருங்கள்! சுவையான செட்டிநாடு இறால் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

​​​​​​​தேவையான பொருட்கள்:

  • இறால் - 250 கிராம்
  • வெங்காயம் - 1
  • மிளகுத்தூள்-3 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 1ஸ்பூன்
  • புளி - லெமன் சைஸ்
  • நெய் - 1 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு-தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு:

  • பச்சை மிளகாய் - 1
  • வரமிளகாய் - 1
  • மிளகு - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1/4 ஸ்பூன்
  • சோம்பு - 1/4 ஸ்பூன்
  • இஞ்சி - 1 இன்ச்
  • பூண்டு - 10 பற்கள்
  • கல்பாசி - சிறிது
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • அன்னாசிப்பூ - சிறு துண்டு
  • பட்டை - 1/2 இன்ச்

இனி வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்!

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு, கல்பாசி, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை ஆகிய்வற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய்,சிறிது நெய் ஊற்றி சூடான பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து பின் பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலாவில் இருந்து தண்ணீர் முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அவைகளின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

இப்போது கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து, உப்பு சேர்த்து, கிளறி விட்டு மசாலாவும் இறாலும் நன்றாக இணைந்து வரும் போது அதில் சிறிது புளிக்கரைசல் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும் .இறால் வெந்த பிறகு, அதில் சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி விட்டு இறுதியாக மல்லித்தழையை தூவினால், சுவையான செட்டிநாடு இறால் சுக்கா ரெடி!.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios