வீடே மணமணக்கும் காரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ருசியான செட்டிநாடு மீன் குழம்பினை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

How to make Chettinad Fish Gravy in English

செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும்.அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் தமிழக அளவில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வரிசையில் இன்று நாம் செட்டிநாடு முறையில் சுவையான மீன் குழம்பை செய்ய உள்ளோம்.

இந்த மீன் குழம்பானது வழக்கமாக செய்கின்ற வகையில் இருந்து சற்று மாற்றாக இருக்கும். இதனை செய்யும் போதே வீடு முழுவதும் கம கம என்ற வாசனை வரும். இந்த மீன் குழம்பினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதத்தில் சுவை மிக பிரமாதமாக இருக்கும். இதனை சாதம, இட்லி, தோசை என்று அனைத்திற்கும் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! ருசியான செட்டிநாடு மீன் குழம்பினை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • வஞ்சிர மீன் - 8 துண்டுகள்
  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • கொத்தமல்லி - சிறிது
  • உப்பு - தேவையான அளவு


அரைக்க தேவையான பொருட்கள்:

  • தேங்காய் - 1/4 கப் (துருவியது)
  • பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
  • தனியாதூள் - 2 ஸ்பூன்
  • மிளகுத்தூள்- 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்


வதக்கி அரைப்பதற்கு :

  • தக்காளி - 1
  • பெரிய வெங்காயம் - 1/2
  • சின்ன வெங்காயம் - 6
  • எண்ணெய் -தேவையான அளவு


தாளிப்பதற்கு:

  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • பூண்டு - 5 பற்கள்
  • தக்காளி - 1
  • சின்ன வெங்காயம் - 10
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - தேவையான அளவு

  சாமை வெண்பொங்கல் செய்து குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!


செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து அலசி , பின் அதன் மேல் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், பெருஞ்சீரகம், தனியாதூள் மிளகுத்தூள்,மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அதில் கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது இதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் உப்பு மற்றும் தண்ணீர் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து சுமார் 1/2 மணி நேரம் சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்

குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக வரும் போதுஅந்த நேரத்தில் மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும். மீன் கொதித்து நன்கு வாசனை வரும் போது குழம்பின் மேல் மல்லிதழையை தூவி பரிமாறினால், கம கம வாசனையில் செட்டிநாடு மீன் குழம்பு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios