Asianet News TamilAsianet News Tamil

இப்படி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செய்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

இன்று நாம் செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இத பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்

How to make Chettinad  Brinjal Fry in Tamil
Author
First Published Mar 1, 2023, 7:52 PM IST

தினமும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக நாம் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், பட்டாணி, காளி ஃபிளவர் என்று ஒரு சில காய்கறிகளையே மீண்டும் மீண்டும் செய்வோம் .

கத்திரிக்காய் போன்ற காய்களை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள தயங்குவார்கள். கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு, அலர்ஜி போன்றவை வரும் என்ற மூடநம்பிக்கையால் அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் கத்திரிக்காய் ஆனது பல்வேறு  மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் அதை அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

கத்திரிக்காய் வைத்து பொரியல்,சாம்பார், குழம்பு,எண்ணெய் கத்தரிக்காய் போன்ற ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று நாம் செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இத பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு:

தேங்காய் - 1/4 கப்
கடலைப் பருப்பு - 3 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
எள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
புளி - சிறிது
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
 

வீடே கமகமக்கும் இறால் புட்டு! எவ்வளவு செய்தாலும் போதாது!

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை அலசி விட்டு அதன் காம்பை வெட்டாமல் ,கத்திரிக்காயை பாதியாக வெட்டி பின் அதனை 5 அல்லது 6 துண்டுகளாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடலைப்பருப்பு, வேர்க்கடலை , கடலைப்பருப்பு, மிளகு, தனியா, சீரகம், எள், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடி போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பொடியை ஒவ்வொரு கத்திரிக்காயின் நடுவில் சிறிது தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் கத்திரிக்காய்களை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவி நன்றாக பவதக்கி விட வேண்டும்.

கத்திரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்கி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகு, அதில் மீதமுள்ள மசாலா பொடியை தூவி நன்றாக கிளறி, மொறுமொறுவென வந்த பிறகு அதனை இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios