கண் பார்வையை மேம்படுத்தும் கேரட் வைத்து சூப்பரான மில்க்க்ஷேக் செய்வோமா!

வாருங்கள்!தித்திப்பான கேரட் மில்க்ஷேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Carrot Milkshake in Tamil

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி வெயிலின் போது சில்லென்று ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா! அந்த வகையில் இன்று நாம் சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண உள்ளோம். மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக்,சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண உள்ளோம்.

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கமாக கேரட் வைத்து பொரியல், சாம்பார், சூப் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் அனைத்தையும் மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.

வாருங்கள்! தித்திப்பான கேரட் மில்க்ஷேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் - 3/4 கப்
  • பால் - 2 கப்
  • பாதாம் - 10
  • ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
  • நாட்டுச்சர்க்கரை - 1ஸ்பூன்

 

ஒரு கப் பச்சரிசி மாவு இருந்தால் போதும்.க்ரிஸ்பியான ரிங் முறுக்கு செய்து விடலாம்.

செய்முறை:

முதலில் கேரட்டை அலசி ஒரே மாதிரியான அளவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, பாதம் சேர்த்து 5 மணி நேரம் வரை ஊற வைத்து பின் அதனை தோல் நீக்கி விட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி காய்த்துக் கொள்ள வேண்டும்.பால் கொதித்து வரும் போது சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்து சற்று கெட்டியாக மாறிய பிறகு, அதில் வெட்டி வைத்துள்ள கேரட், பொடித்த பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக விட வேண்டும்.

அனைத்தும் வெந்த பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். கலவை ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் வெந்த கேரட், பாதாம் போன்றவற்றை சேர்த்து சிறிது பால் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த விழுதில் மீதமுள்ள பாலை சேர்த்து நன்றாக பீட் செய்துஅதனை ஒரு கண்ணாடி க்ளாஸ்ஸில் ஊற்றி அதன் மேல் பொடித்த பாதாம் சிலவற்றை தூவி 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து சாப்பிட்டால் சில்லென்று தித்திப்பான கேரட் மில்க் ஷேக் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios