Asianet News TamilAsianet News Tamil

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி-"கேப்ஸிகம் ரைஸ் "

வாருங்கள்! சுவையான கேப்ஸிகம் ரைஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Capsicum Rice in Tamil
Author
First Published Jan 30, 2023, 6:08 PM IST

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை என்று செய்து கொடுத்து போர் அடிக்குதா? வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் மாற்றாக வேறு ஏதேனும் சுவையாக செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்று நாம் லஞ்ச் பாக்சிற்கு கொடுத்து அனுப்பும் வகையில் வெரைட்டி ரைஸ் செய்ய உள்ளோம்.பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றால் தயிர் சாதம் ,தக்காளி சாதம், சாம்பார் சாதம்,காய்கறி சாதம் என்று தான் அதிகமாக செய்து கொடுத்து அனுப்புவோம். 

ஆனால் இன்று நாம் சூப்பரான சுவையில் கேப்ஸிகம் ரைஸ் செய்ய உள்ளோம். இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்திடலாம். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள்,பச்சை சிவப்பு நிற கேப்ஸிகம்களை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். கேப்ஸிகம் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

வாருங்கள்! சுவையான கேப்ஸிகம் ரைஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி-1 கப்
  • கேப்ஸிகம்-2
  • பெரியவெங்காயம் -2
  • மிளகுத்தூள்-2 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் 1/2 -ஸ்பூன்
  • மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு

இனிமே காளான் வாங்கினா இப்படி தொக்கு செய்து சாப்பிடுங்க !
 

செய்முறை:

முதலில் அரிசியை அலசி வைத்து விட்டு ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி விட்டு 2 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.கேப்ஸிகம்,வெங்காயம் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேப்ஸிகம், வெங்காயம், கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அடுத்ததாக அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும். இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான கேப்சிகம் ரைஸ் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios