சூப்பரான சைட் டிஷ் கேப்ஸிகம் பொரியல்! இப்படி செய்து கொடுங்க!

வாருங்கள்! சத்தான கேப்ஸிகம் பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Capsicum Fry Recipe in Tamil

தினமும் சாப்பிடும் உணவில் பல விதமான காய்கறிகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே மாதிரியான காய்கறிகளை தினமும் சமைத்து கொடுத்தால் மிகவும் போர் அடிக்கும். மேலும் பெண்கள் பலரும் நாளை என்ன சமைக்கலாம் என்று முதல் நாளே யோசித்து வைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கான பதிவு தான் இது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டியான காய்கறிகளை செய்தால் தான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் இன்று நாம் கேப்ஸிகம் வைத்து சுவையான, சத்தான ஒரு ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக கேப்ஸிகத்தை ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பிட்ஸா, கிரேவி போன்றவற்றில் அதிகமாக சேர்த்து சமைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் கேப்ஸிகம் வைத்து அருமையான பொரியல் ரெசிபியை செய்ய உள்ளோம். இதை ரசம் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம்,குழம்பு சாதம் போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

வாருங்கள்! சத்தான கேப்ஸிகம் பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

  • கேப்ஸிகம் - 2
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 3
  • மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

வீட்டிற்கு வரும் கெஸ்ட்டுக்கு 10 நிமிடத்தில் இப்படி "மைதா போண்டா" செய்து கொடுத்து அசத்துங்க! 

செய்முறை:

முதலில் கேப்ஸிகம் ,தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறிய பின் அதில் தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்ததாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேப்ஸிகம் சேர்த்து விட்டு நன்றாக மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து நன்றாக கிளறி விட்டு பின் அதி சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வரை வேக வைத்து இறக்கினால் டேஸ்ட்டான கேப்ஸிகம் பொரியல் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios