Asianet News TamilAsianet News Tamil

Brinjal Chutney : சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி!

சூப்பரான இந்த கத்தரிக்காய் சட்னி நாம் வழக்கமாக இட்லி, தோசைக்கு செய்கின்ற தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி, சாம்பார் போன்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

How to make Brinjal Chutney in Tamil
Author
First Published Dec 4, 2022, 6:23 PM IST

வழக்கமாக நாம் கத்திரிக்காய் வைத்து சாம்பார்,குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய், பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். வேற ஏதாவது கத்திரிக்காய் வைத்து செய்துள்ளீர்களா? அதுவும் கத்திரிக்காய் வைத்து ருசியான சட்னி செய்துள்ளீர்களா? என்னது கத்திரிக்காயில் சட்னியா என்று யோசிக்கிறீர்களா? 

ஆமாங்க சூப்பரான இந்த கத்தரிக்காய் சட்னி நாம் வழக்கமாக இட்லி, தோசைக்கு செய்கின்ற தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி, சாம்பார் போன்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இந்த கத்தரிக்காய் சட்னியை இட்லி,தோசைக்கு மட்டுமளளது வெண்பொங்கல், தயிர் சாதம் போன்றவற்றிக்கும் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். 

பொதுவாக குழந்தைகளும் சரி, ஒரு சில பெரியவர்களும் சரி கத்திரிக்காய் என்றால் சாப்பிட தயங்குவார்கள்.எனவே இந்த மாதிரி கத்தரிக்காய் சட்னி செய்து கொடுத்தால், கத்திரிக்காயின் முழு சத்தும் கிடைக்கும். 

வாருங்கள்! ருசியான கத்திரிக்காய் சட்னி ஈஸியாக வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 2 
வெங்காயம்-1
தக்காளி-2
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத் தூள் -2 சிட்டிகை 
புளி - 1 நெல்லிக்காய் அளவு 
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:

எண்ணெய் -2 ஸ்பூன் 
கடுகு-1/2 ஸ்பூன் 
பெருங்காயத்தூள்-2 சிட்டிகை 
கறிவேப்பிலை -1 கொத்து 

அனைவரும் விரும்பி சாப்பிடும் க்ரீமி மஷ்ரும் டோஸ்ட் !!

செய்முறை: 

முதலில் கத்திரிக்காயை அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அலசிய கத்திரிக்காயை சிறிய அளவில் அரிந்து போட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி ,பின் கடாயில் அரிந்த தக்காளி , வெங்காயம்,கத்திரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பின் அதனுடன் புளி, வர மிளகாய் ,பெருங்காயத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

வெந்த பிறகு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, கலவையை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு, கலவையை ஒரு கிண்ணத்தில் மாற்றி மத்து வைத்து கடைந்துக் கொள்ள வேண்டும். (அல்லது மிக்சி ஜாரில் போட்டு ஒரே ஒரு சுற்று மட்டும் சுற்றிக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.)

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால் அருமையான கத்திரிக்காய் சட்னி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios