பாகற்காய் வைத்து இவ்வளவு அட்டகாசமான பொடியை செய்து சாப்பிட்டு இருக்கீங்களா!

வாருங்கள்! பாகற்காய் வைத்து ருசியான பொடியை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Bitter Gourd Powder in Tamil

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வழக்கமாக பீன்ஸ்,கேரட்,உருளைக் கிழங்கு,கோஸ், முருங்கை, பட்டாணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வோம். ஆனால் இதனை தவிர பல விதமான காய்கறிகளை நாம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறோம். அப்படிப்பட்ட காய்களில் ஒன்றான பாகற்காய் வைத்து எளிமையான ஒரு ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். 

அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவையை தரும் பாகற்காயை நம்மில் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் அது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மையை நமக்கு அளிக்கிறது. 

நீரழிவு நோய் உள்ளவர்கள் வாரம் ஒரு முறையாவது இதனை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். மேலும் உடலில் இருக்கும் புழு,பூச்சிகளை கொள்ள அருமருந்தாக பயன்படுகிறது.

பாகற்காய் வைத்து செய்யப்படும் ரெசிபிக்களை பெரியவர்கள் கூட சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே இந்த மாதிரி ஒரு பொடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

வாருங்கள்! பாகற்காய் வைத்து ருசியான பொடியை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Pasalai Keerai: புதிய இரத்த உற்பத்திக்கு இந்த ஒரு கீரையே போதும்!

தேவையான பொருட்கள்:

பாகற்காய்-1/4 கிலோ 
நிலக்கடலை-100கிராம் 
காய்ந்த மிளகாய்-6
பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன் 
தேங்காய்-3 ஸ்பூன் 
புளி -லெமன் சைஸ் 
எண்ணெய்-தேவையான அளவு 

செய்முறை:

முதலில் பாகற்காயினை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 4 ஸ்பூன் அளவில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பின் அதில் நிலக்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு,பின் இதில் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை தனியாக எடுத்துக் கொண்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே எண்ணெயில் பொடியாக அரிந்து வைத்துள்ள பாகற்காயினை சேர்த்து,தீயினை சிம்மில் வைத்து பாகற்காய் பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்..பின் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் வறுத்த நிலக்கடலை, பெருங்காயம்,மிளகாய் மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பாகற்காய் , புளி மற்றும் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த பொடியினை வறுத்த எண்ணெயில் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கிளறி எடுத்தால் ருசியான பாகற்காய் பொடி ரெடி!!! 

இதில் வெல்லம் ,புளி ,தேங்காய் போன்றவை சேர்த்து இருப்பதால் பாகற்காயின் கசப்பு சுவை கசற்று குறைவாக இருக்கும். இதனை சூடான் சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios