சுகர் உள்ளதா? அப்போ பாகற்காயை இப்படி செய்து சாப்பிடுங்க!

வழக்கமாக பாகற்காயை வைத்து வறுவல், பொரியல், சாம்பார், கூட்டு, குழம்பு என்று பல ரெசிபிஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று நாம் பாகற்காய் வைத்து சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம். 

How to make Bitter Gourd Celery Soup in Tamil

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல விதமான காய்கறிகளை சமைத்து சாப்பிட்டு வருகிறோம். வழக்கமாக பீன்ஸ்,கேரட்,கோஸ்,
உருளைக்கிழங்கு, பட்டாணி, காளி பிஃளவர் போன்றவற்றை உணவில் அடிக்கடி செய்து சாப்பிடுகிறோம். 

ஆனால் இதனை தவிர்த்து பல விதமான காய்கறிகளை நாம் விரும்பி சமைப்பதில்லை. விரும்பி சமைக்க படாத காய்கறிகளில் முதன்மையானது பாகற்காய் என்று கூறலாம். பாகற்காய் போன்ற காய்கறிகளை உணவில் அதிகமானோர் சேர்த்துக் கொள்வதில்லை அதற்கு மிக முக்கிய காரணம் அதன் கசப்பு தன்மையே. 

ஆனால் இயற்கையாகவே கசப்பான தன்மை கொண்ட பாகற்காய் போன்றவற்றை நாம் உண்ணும் உணவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் ஆரோக்கியம், செரிமானம், சர்க்கரை அளவு மற்றும் ஊட்டச்சத்து முதலியவற்றை மேம்படுத்த உதவுகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வளரும் குழந்தைகள் பாகற்காயை சாப்பிட மறுப்பார்கள்.உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு உடல் எடையைக் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் கே, நீர்ச்சத்து,லைகோபீன் மற்றும் பைட்டோகெமிக்கல்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் பால் கொடுக்கும் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 

வழக்கமாக பாகற்காயை வைத்து வறுவல், பொரியல், சாம்பார், கூட்டு, குழம்பு என்று பல ரெசிபிஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று நாம் பாகற்காய் வைத்து சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம். 

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய் 2
செலரி – 1
கடலை பருப்பு – 25 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு-4 பற்கள் 
மிளகு தூள் – 2 ஸ்பூன்
கல் உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தண்ணீர்-தேவையான அளவு 
மல்லித்தழை-கையளவு 

Sooji Muruku : ரவை சேர்த்து மொறுமொறுப்பான முறுக்கு செய்யலாம் வாங்க!

செய்முறை

முதலில் பாகற்காயை அலசி விட்டு, இரு புறமும் உள்ள காம்பினை வெட்டிக் கொண்டு, பின் ஒரே அளவிலான , சிறிய அளவில் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியையம் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். செலரியையும் மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, சீரகம், கடலைப்பருப்பு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்,பொடியாக அரிந்து வைத்துள்ள பாகற்காய் மற்றும் செலரி சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். 

பாகற்காயும் ,செலரியும் கொஞ்சம் வெந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு, இரண்டையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரைத்த பாகற்காய் விழுது மற்றும் வெங்காயம்-தக்காளி விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு மற்றொரு பாத்திரத்தில் இதனை வடிகட்டிக் கொண்டு, தேவையான அளவு மிளகுத் தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்தால் போதும் சுவையான பாகற்காய் சூப் ரெடி!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios