Asianet News TamilAsianet News Tamil

மாவு அரைத்து கஷ்டப்படாமல் ஈஸியா மொறு மொறு "கடலை மாவு தோசை" சுடலாம் வாங்க!

வாருங்கள்! க்ரிஸ்பி கடலை மாவு தோசை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to Make Besan Flour Dosa in Tamil
Author
First Published Feb 16, 2023, 11:55 AM IST

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் விரும்பி சாப்பிடுகின்ற உணவு வகையில் தோசை முதலிடத்தில் இருக்கிறது. தோசை என்றால் அரிசி பருப்பு ஊற வைத்து,பின் அரைத்து, புளிக்க வைத்து பக்குவமாக எடுத்து வைத்து தோசை சுடுவது பெரிய ப்ராசஸ் தான். இப்படி மாவு அரைத்து கஷ்டப்படாமல் சட்டென்று ஈஸியா தோசை செய்யலாம் என்றால் இதனை ட்ரை பண்ணலாம். பொதுவாக கோதுமை மாவு தோசை, ரவா தோசை, ராகி தோசை போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் கடலை மாவு வைத்து சூப்பரான ஹெல்த்தியான தோசையை செய்வதை காண உள்ளோம். இதில் காய்கறிகளும் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமான தோசை ஆகும். ஒரே மாதிரியான தோசை வகைகளை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த மொறு மொறு கடலை மாவு தோசை நிச்சயமாக பிடிக்கும்.

வாருங்கள்! க்ரிஸ்பி கடலை மாவு தோசை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 கப்
  • பச்சரிசி மாவு – 1 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • குடை மிளகாய் – 1
  • கேரட் -1
  • பச்சை மிளகாய் -4
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • மல்லித்தழை-கையளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

கோயம்புத்தூர் ஸ்டைலில் மணக்கும் தக்காளி குழம்பு ரெசிபியை செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, கேப்ஸிகம் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு ஆகியவை சேர்த்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இந்த மாவில் பொடியாக அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துக்க கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் மாவினை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து ரவா தோசைக்கு ஊற்றுவது போல மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு அப்படியே எடுத்து விட்டால் மொறுமொறு தோசை ரெடி! (மறுபக்கம் திருப்பி போட வேண்டாம்) இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios