Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கிய நலனை அள்ளித் தரும் வாழைத்தண்டு சூப்! சாப்பிட்டு ஆனந்தமாய் வாழலாம் வாங்க!

ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வாழைத்தண்டு வைத்து , சூப்பரான சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Banana Stem Soup in Tamil
Author
First Published Nov 20, 2022, 5:09 PM IST

மாலை நேரங்களில் வழக்கமாக நம்மில் அனைவரும் காபி, டீ போன்றவற்றை அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். இதனையே தினமும் குடித்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியமான ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான் . 

நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளில் வாழைத்தண்டும் ஒன்றாகும். இது உடல் எடையைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இது நமது உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் துணை புரிகிறது. 

அதோடு வாழைத்தண்டில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகி விடும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், விரைவில் நலம் பெறுவார்கள். 

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வாழைத்தண்டு வைத்து , சூப்பரான சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

சூப்பரான சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி செய்து சாப்பிடலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
சீரகப் பொடி - 1/4 ஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 ஸ்பூன் 
லெமன் ஜூஸ் - 1/2 பழம் 
உப்பு -தேவையான அளவு 

தாளிப்பதற்கு: 

எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
கொத்தமல்லி - கையளவு 

செய்முறை: 

முதலில் வாழைத்தண்டில் இருக்கும் நார்ப் பகுதியை எடுத்து விட்டு,பின் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மோர் சேர்த்துக் கொண்டு, அதில் அரிந்து வைத்துள்ள வாழைத்தண்டினை போட்டுக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, 2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் நறுக்கிய வாழைத் தண்டினை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு, குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பின் குக்கரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து,குக்கரை 3 விசில் வரும் வரை வைக்க வேண்டும். விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து வெந்த வாழைத்தண்டினை, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வேக வைத்துள்ள வாழைத்தண்டை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, வேக வைத்த தண்ணீரை கொஞ்சம் ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொண்டு, அதில் மீதமுள்ள வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து,தீயனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில், சிறிய பான் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் காய்ந்த பிறகு, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் சூப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்த சூப்பில் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மல்லித் தழையை தூவினால், சூப்பரான வாழைத்தண்டு சூப் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios