Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்கு நெய் மணக்கும் பாதாம் அல்வா செய்யலாம் வாங்க!

பாதாம் பயன்படுத்தி பாதாம் பால், பாதாம் பர்பி, பாதாம் அல்வா அன்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். இன்று நாம் பாதாம் ஹல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம்.

How to Make Badam Halwa sweet recipe in Tamil
Author
First Published Oct 18, 2022, 7:43 PM IST

தீபாவளி வர விருக்கிறது. என்ன ஸ்வீட் பண்ண போறீங்க என்று அனைவரும் கேட்க ஆரம்பித்து இருப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடும் இந்த தீபாவளியில் அனைவரும் ஒரே விதமான இனிப்புகளை செய்தால் ஷேர் செய்தாலும் சுவைக்க தோன்றாது. எனவே நாம் சநெய் – 50 கிராம்.ற்று மாறுதலாக அனைவரும் செய்கின்ற இனிப்பு பண்டத்தை செய்யாமல் இந்த முறை பாதாம் ஹல்வாவை எப்படி சுவையாக மற்றும் எளிமையாக செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

பாதாம் பயன்படுத்தி பாதாம் பால், பாதாம் பர்பி, பாதாம் அல்வா அன்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். இன்று நாம் பாதாம் ஹல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம். 

பாதாம் அல்வா என்றவுடன் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட் ஆகும். இது இந்தியாவின் அனைத்து இடங்களிலும் அனைத்து சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களிலும் செய்து மகிழ்வார்கள். அவ்வளவு சுவை மிக்க பாதாம் அல்வா எவ்வாறு செய்வது என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

தீபாவளிக்கு ரெடியாக உள்ளீர்களா? வாயில் போட்டவுடன் கரையும் பர்பி செய்யலாமா?

பாதம் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
நெய்-50 கிராம் 
பால் – 100 மில்லி
பாதாம் எசன்ஸ் – 4 துளிகள் 
மஞ்சள் ஃபுட் கலர் – 1/2 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதித்த பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் பாதாம் பருப்பை சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதம் பருப்புகளின், தோல் நீக்கி கொள்ள வேண்டும். இப்போது பாதம் பருப்புகளை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதில் கொஞ்சம் பால் ஊற்றி, மை போல் அரைத்து கொள்ள வேண்டும்.

Achu Murukku ; தீபாவளி ஸ்பெஷல் - வீட்டிலேயே அசத்தலான அச்சு முறுக்கு செய்யலாம்.

பிறகு அடுப்பில் ஒரு விலாசமான கடாய் வைத்து , கடாய் காய்ந்த பின் அதில் அரைத்து வைத்துள்ள பாதாம் – பால் விழுதை சேர்க்க வேண்டும். பின் அதில் சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கரைய விடவும். 

அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, பாதாம் - பால் விழுதானது கடாயில் ஒட்டாத வண்ணம் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் சில துளிகள் பாதாம் எசன்ஸ் சேர்த்து ஒரு கிளறி கிளறி அடுப்பை ஆஃப் செய்து இறக்கி விட வேண்டும். இப்போது அனைவருக்கும் பிடித்த சுவையான பாதாம் ஹல்வா தயார் ஆனது.

Follow Us:
Download App:
  • android
  • ios