Achu Murukku ; தீபாவளி ஸ்பெஷல் - வீட்டிலேயே அசத்தலான அச்சு முறுக்கு செய்யலாம்.
அச்சு முறுக்கு கேரளாவின் மிகப் பிரபலமான ஸ்னாக்ஸ் வகையை சேர்ந்தது. இதனை முட்டை மற்றும் மைதா மாவினால் செய்வார்கள். இன்று நாம் சற்று வித்தியாசமாக மைதா மற்றும் முட்டை சேர்க்காமல், வீட்டிலேயே அச்சு முறுக்கை எளிமையாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி என்றவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக மகிழ்ச்சியுடனும் , ஆவளுடனும் இருப்பர். அதற்கு காரணம் பட்டாசு, புத்தாடைகள், உறவினர்கள் மற்றும் அவர்கள் விரும்பி உண்ணும் பல வகையான ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் ஆகும். அந்த வகையில் இன்று நாம் முட்டை அச்சு முறுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்க்க உள்ளோம்.
அச்சு முறுக்கு கேரளாவின் மிகப் பிரபலமான ஸ்னாக்ஸ் வகையை சேர்ந்தது. இதனை முட்டை மற்றும் மைதா மாவினால் செய்வார்கள். இன்று நாம் சற்று வித்தியாசமாக மைதா மற்றும் முட்டை சேர்க்காமல், வீட்டிலேயே அச்சு முறுக்கை எளிமையாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியத்தை அள்ளி தரும் தினை பாயசம்!
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
சர்க்கரைபவுடர் –1/4 கப்
கறுப்பு எள் – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் – 1/4 கப்
நீர் –தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – 1 சிட்டிகை
செய்யும் விதம் :
முதலில் அரிசியை நன்றாக கழுவி, பின்அதில் நீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பின் நீரினை வடித்து விட்டு ,அரிசியை ஒரு காட்டன் துணியில் ஈரம் போக உலர்த்திக் கொள்ளவும். சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பவுடராக பொடித்துக் கொள்ள வேண்டும். பின் அதே மிக்சி ஜாரில் தேங்காயை சேர்த்து தேங்காய் பால் எடுத்து கிண்ணத்தில் வடிகட்டிய பின், ஒரு கிளாஸ் அளவு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு மிக்சி ஜாரில் அரிசியை போட்டு நைசான மாவாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவினை சல்லடையில் போட்டு ஒரு பெரிய தட்டில் சலித்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் சலித்த மாவை சேர்த்து அதனுடன் தேங்காய் பால், சர்க்கரை பவுடர், எள், ஏலக்காய் பொடி, மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாககலந்து கொள்ளவும் .
மாவின் பதமமானது கெட்டியாகவோ அல்லது நீராகவோ இல்லாமல் சற்று மிதமாக இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதனுடன் முறுக்கு அச்சினையும் சேர்த்து நன்கு காய வைக்கவும்.
Wheat Globe Jamoon : தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?
அச்சு காய்ந்த உடன், மாவினுள் 1/2 பகுதி வரை டிப் செய்து உடனே காயும் எண்ணெயில் வைத்து விடவும். அச்சினை லேசாக ஆட்டிய உடன், முறுக்கு தனியாக எண்ணெயில் வந்து விடும். தீயை சிம்மில் வைத்து முறுக்கினை திருப்பி விட்டு 1 நிமிடத்தில் எடுத்து விடவும். எண்ணெயிலிருந்து முறுக்கு எடுக்கும் போது சாஃப்டாக இருக்கும், ஆறிய பின்பு மொறுமொறு வென்று இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு அச்சாக எண்ணெயில் சேர்த்து முறுக்கு சுட வேண்டும்.
அவ்ளோதாங்க சுவையான அச்சு முறுக்கு தயார்!.