Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியத்திற்கு ஏற்ற அருமையான ஆந்திரா கோங்குரா சட்னி! இப்படி செய்து பாருங்க!

வாருங்கள்! சத்தான ஆந்திரா கோங்குரா சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Andra Gongura Chutney in Tamil
Author
First Published Feb 15, 2023, 11:47 AM IST

ஆந்திரா என்றவுடன் நினைவில் வருவது கார சாரமான உணவு வகைகள் தான். அதில் குறிப்பாக ஆந்திரா சிக்கன், ஆந்திரா பருப்பு பொடி , ஆந்திரா மினப்பகாய் பஜ்ஜி, ஆந்திரா கோங்குரா, ஆந்திரா ஊறுகாய் போன்றவை ஆந்திராவின் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வகையில் இன்று நாம் ஆந்திராவின் மிக பிரபலமான ஆந்திரா கோங்குரா ரெசிபியை தான் காண உள்ளோம்.

இந்த கோங்குரா என்பதனை நாம் புளிச்சகீரை என்று அழைப்போம். இந்த கோங்குரா ஆந்திராவின் பிரதான உணவுகளில் மேலும் தவிர்க்க முடியாத உணவு பட்டியலில் ஒன்றாக உள்ளது. பெரிய ரெஸ்டாரண்ட் , உணவகங்கள், திருமணம் மற்றும் இதர நிகழ்வுகளிலும் என அனைத்து இந்த ரெசிபி நிச்சயமாக இடம் பெற்று இருக்கும். இதனை சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு எதையும் தேடவே மாட்டார்கள் எனில் அதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த கோங்குராவை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.மேலும் ​மலச்சிக்கலை போக்கும். இதனை தவிர ​வாதநோய்க்கும், ​சரும வியாதிகளுக்கும் சிறந்தமருந்தாகும். இந்த புளிச்ச கீரை இரத்த சோகை குறைபாட்டை போக்கும் தன்மை கொண்டது. அது தவிர இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகப்படுத்துகிறது.

வாருங்கள்! சத்தான ஆந்திரா கோங்குரா சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • புளிச்சகீரை – 1 கட்டு
  • பூண்டு – 8 பற்கள்
  • பச்சை மிளகாய் – 15
  • புளி – சிறிது
  • பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
  • கடுகுத்தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
  • கடுகு – 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

நாவை சுண்டி இழுக்கும் "செட்டிநாடு கோழி உப்புக்கறி"

செய்முறை:

முதலில் புளிச்ச கீரையைஅலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கீரையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டு பற்களை சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். பூண்டு வதங்கிய பின்னர் கீரையைச் சேர்த்து 4 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் புளிக் கரைசல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு பின் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து சேர்த்து கீரையில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கி விட வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு சிறிது நேரம் ஆற வைத்து பின் அதனை மத்து வைத்து மசித்து விட வேண்டும். (மிக்சி ஜாரில் சேர்த்தால் ஒரே ஒரு சுற்று விட வேண்டும்) அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின், கடுகு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை  சட்னியில் ஊற்றி கிளறினால் கோங்குரா சட்னி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios