இப்படி "ஆலூ சாட்" செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்!

வாருங்கள்! நாவூறும் ஆலூ சாட் ரெசிபியை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Aloo Chaat Recipe in Tamil

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலூ சாட், சன்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட்,பேல் பூரி,தஹி பூரி என்று பல விதங்களில் செய்யலாம். எந்த சாட் ஆனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர். அப்படிப்பட்ட சாட் வகையில் ஒன்றான ஆலூ சாட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். வழக்கமாக சாட் போன்ற உணவுகளை வெளியில் வாங்கி தான் சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் அதனை வீட்டில் செய்வதால் அதிகமாக செய்து சாப்பிடலாம்.

வாருங்கள்! நாவூறும் ஆலூ சாட் ரெசிபியை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/2 ஸ்பூன்
லெமன் ஜூஸ்-1/2 ஸ்பூன்
புளிக் கரைசல் -1 ஸ்பூன்
க்ரீன் சட்னி - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
ஓமப் பொடி(சேவ்) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
டொமேட்டோ சாஸ்-தேவையான அளவு
மாதுளை - அலங்காரத்திற்கு

அடிக்கும் வெயிலுக்கு சில்லென்று “வாழைப்பழ ஸ்மூத்தி” செய்து சாப்பிடலாம் வாங்க!

செய்முறை :

முதலில் உருளைகிழங்கினை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து வேக வைத்துக் கொண்டு குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விசில் அடங்கிய பிறகு, குக்கரை திறந்து உருளைக் கிழங்கினை நன்றாக ஒரே அளவிலான வடிவில் கட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் கட் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

உருளைக்கிழங்கானது பொன்னிறமாக மாறிய பின் அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பௌலில் மிளகாய் தூள், ஆம்சூர் தூள்,சாட் மசாலா,சீரகப் பொடி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின் அதில் லெமன் ஜூஸ்,புளிக்கரைசல், புதினா சட்னி மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை ஆகியவை சேர்த்து கிளறி விட வேண்டும்.

இதனை ஒவ்வொரு பிலேட்டிலும் வைத்து அதன் மேல் சேவுகளை (ஓமப்பொடி) தூவி பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை மற்றும் மாதுளை பழ விதைகள் தூவி அலங்கரித்து பின் டொமேட்டோ சாஸ் சிறிது அதன் மேல் ஊற்றி பரிமாறினால் அட்டகாசமான ஆலு சாட் ரெசிபி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios