மொறுமொறுவென கொங்குநாடு சேனை மசாலா எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!


வாருங்கள்! ருசியான சேனை மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

How to do Crispy Yam Masala in Tamil

தினமும் மதியம் என்ன காய்கறிகள் செய்யலாம், எதை புதுமையாக செய்யலாம் என்று புலம்பி கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்று நாம் சூப்பரான சுவையில் கொங்கு நாடு ஸ்டைலில் அருமையான சேனை மசாலா செய்வதை பார்க்க உள்ளோம். இதனை சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! ருசியான சேனை மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
  • உப்பு - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு


மசாலா செய்வதற்கு: 

  • கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
  • இஞ்சி - 1 இன்ச்
  • பூண்டு - 6 பற்கள்
  • பட்டை - 2 இன்ச்
  • லவங்கம் - 2
  • காய்ந்த மிளகாய் - 5
  • சோம்பு - 1 1/2 ஸ்பூன்
  • தேங்காய் - 1/2 கப்
  • கசகசா - 1 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - கொத்து


தாளிப்பதற்கு:

  • கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து


      அட்டகாசமான மட்டன் பால்ஸ் செய்யலாம் வாங்க!

 

செய்முறை :

முதலில் சேனைக்கிழங்கின் தோல் எடுத்து அலசி ஒரே மாதிரியான அளவில் அரிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேக விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் வேக வைத்து எடுத்துள்ள கிழங்கினை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை ப்ரை செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு ,காய்ந்த மிளகாய் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொண்டு அதில் கசகசா, துருவிய தேங்காய், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

1 மிக்சி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் பானில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பின் கடுகு,உளுந்து மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கிழங்குடன் மசாலா சேரும் வரை வதக்கி இறக்கினால், சூப்பரான சுவையில் கொங்குநாடு சேனை மசாலா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios