குட்டிஸ்களுக்கு பிடித்த "கோதுமை அப்பம்"! - நெய் மணக்க மணக்க இப்படி செய்து கொடுங்க!
சுவையான மற்றும் சத்தான கோதுமை அப்பம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி முடித்து சோர்வாக வரும் குழந்தைகளுக்கு, இந்த மாதிரி ஆரோக்கியமான மற்றும் சத்தான ஸ்னாக்ஸ் செய்து கொடுங்க. சத்தமில்லாமல் தட்டில் வைத்ததை மிச்சசமில்லாமல் சாப்பிட்டுமீண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை சேர்க்காமல் செய்வதனால்வயதானவர்களுக்கும் இது ஏற்ற உணவு என்று கூறலாம்.
வழக்கமாக அரிசியை வைத்து தான் நாம் அப்பம் சாப்பிட்டு இருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக இன்று நாம் கோதுமையை பயன்படுத்தி அப்பம் செய்வோமா? இந்த ரெசிபியை மாலை மட்டுமல்லாமல் காலை சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். சுவையான மற்றும் சத்தான கோதுமை அப்பம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய வெல்லம் 1/2 கப்
கோதுமை மாவு 1 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
பெருஞ்சீரகம் விதைகள் 1/4 ஸ்பூன்
பேக்கிங் சோடா1/4 ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
நெய் தேவையான அளவு
சுவையான பாம்பே ஹல்வா 10 நிமிஷத்தில் செய்து அசத்தலாம் வாங்க!
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து , வெள்ளம் நன்றாக கரையும் வரை கலக்கி விட வேண்டும். பின் இதில் கோதுமை மாவு, கசக்கிய பெருஞ்சீரகம், பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கிய பிறகு, தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் ஊற்றிய பிறகு, கட்டிகள் இல்லாதவாறு மீண்டும் நன்றாக கலக்கி விட வேண்டும். விசிக் பயன்படுத்தி கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் வரை பீட் பண்ணி விட வேண்டும்.
பின் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பீட் செய்து விட வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கி விட வேண்டும். பின்னர் அடுப்பில் தோசைக்கல் வைக்க வேண்டும். தோசைக்கல் சூடான பின், அதில் ஒரு கரண்டி மாவினை ஊற்ற வேண்டும்.அடுப்பின் தீயை குறைத்து கொள்ள வேண்டும்.மாவின் மேற்பரப்பில் குமிழ்கள் வருவதை பார்க்க முடியும் சுற்றி சிறிது நெய் சேர்க்க வேண்டும்.
மாவின் அடித்தளம் சாஃப்டாகவும் ,பொன்னிறமாக மாறும் போது , அப்பத்தை திருப்பி போட வேண்டும். அப்படியே ஒரு நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அப்பத்தை குழந்தைகளுக்கு ஜாம், க்ரீம் ,தேன் அல்லது சாக்லேட் சிரப் வைத்து அலங்கரித்து கொடுத்தால் சிறிது நேரத்தில் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.