Prawn Gravy : நாவூறும் செட்டிநாடு இறால் கிரேவி! இப்படி செய்து பாருங்க

இந்த பதிவில் வீட்டில் எளிமையாக சூப்பரான செட்டிநாடு இறால் கிரேவி எப்படி செய்யலாம் என்று காணலாம்.

How to cook Prawn Gravy in Tamil

நம்மில் பலரும் வார விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில் குறிப்பாக, அசைவப் பிரியர்கள் வழக்கமாக அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். சிலர் கடல் உணவான மீனையும் சாப்பிடுவார்கள். வழக்கமாக செய்கின்ற இவற்றை செய்யாமல், இந்த வாரம் ஒரு முறை இப்படி இறால் கிரேவியை செய்து பாருங்கள்.அதன் பிறகு, வீட்டில் உள்ள அனைவரும் இதனையே அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். 

இந்த இறால் கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி,பரோட்டா, சாதம் என்று எல்லாவற்றிக்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். மேலும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த இறால் கிரேவி ஏற்றதாக இருக்கும். 

இந்த பதிவில் வீட்டில் எளிமையாக சூப்பரான செட்டிநாடு இறால் கிரேவி எப்படி செய்யலாம் என்று காணலாம். 

தேவையான பொருட்கள் :

இறால்- 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
உப்பு தேவையான அளவு 

கிரேவி செய்வதற்கு :

பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய்- 3
மிளகுத்தூள்-1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
தனியா தூள் -1 ஸ்பூன் 
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
கருவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை -கையளவு 

வீட்டிலேயே சாஃப்டான "ஸ்பான்ஜ் கேக்" செய்ங்க!

செய்முறை:

முதலில் இறாலை சுத்தப்படுத்தி விட்டு, நன்றாக தண்ணீரில் அலசி விட வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் சேர்க்காமல், அதில் அலசி வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். இறாலில் இருக்கும் தண்ணீர் வெளிவந்து வற்றும் வரை இறாலை நன்றாக வதக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, அதில் பச்சை மிளகாயை கீறி போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து,வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். 

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் விட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, அடுத்து இறால் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி விட வேண்டும். 

3 நிமிடங்கள் கழித்து,மிளகுத்தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். இந்த தூள்களின் கார வாசனை போகும் வரை வதக்கி விட்டு, பின் தண்ணீர் சேர்த்து கடாயை , ஒரு தட்டு போட்டு மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக விட வேண்டும். 

5 நிமிடங்களுக்கு பிறகு, கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வரும் போது , மல்லித்தழையை தூவி இறக்கினால், நாவூறும் செட்டிநாடு இறால் கிரேவி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios