Paneer Masala : சூப்பரான செட்டிநாடு பன்னீர் மசாலா கிரேவி!

இந்த கிரேவியை செஞ்சு இருக்கீங்களா?  செஞ்சதில்லையா ? கவலையை விடுங்க . இதை படித்து விட்டு நீங்களும் செட்டிநாடு ஸ்டைலிலில் சூப்பரான  பன்னீர் மசாலா வீட்டிலேயே செய்யலாம்ங்க . 
 

How to cook Chettinad Paneer Masala in Tamil

பன்னீர் டேஸ்ட்டான  உணவு என்பது மட்டுமே நமக்கு  தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல  பயன்கள் கிடைக்கின்றன. அவை என்னென்ன பயன்கள்  என தெரிந்து  கொள்வோம்.

பன்னீரில்  கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும்  உள்ளன.  வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், ​உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது.  தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன.  இப்போ பன்னீரை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி சமைக்கலாம் என்று பார்ப்போம் வாங்க. 

Crab Cutlet : நா ஊறும் நண்டு கட்லெட்!

How to cook Chettinad Paneer Masala in Tamil

தேவையான பொருட்கள்:

மசாலாவிற்கு :

சீரகம் 1 ஸ்பூன் 
சோம்பு 1 ஸ்பூன் 
தனியா விதை 1 ஸ்பூன் 
மிளகு 1/2 ஸ்பூன் 
நட்சத்திர சோம்பு 1
பிரியாணி இலை 1
கிராம்பு 5 
ஏலக்காய் 3
கடல் பாசி 1 
பட்டை 1 சிறிய  துண்டு 
வர மிளகாய் 6 
காய்ந்த கருவேப்பிலை கொஞ்சம் 
துருவிய தேங்காய் 1/2 கப் 

நாட்டு கோழி குழம்பு தானே இருக்கு.. அதென்ன ''நாட்டுகோழி ரசம்'' செய்யலாம் வாங்க!

கிரேவிக்கு தேவையான பொருட்கள் :

வெங்காயம் 1  
தக்காளி 1 (பொடியாக நறுக்கியது) 
பூண்டு 4 பல் (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி 1 சிறிய துண்டு  (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் 
சீரக தூள் 1/4 ஸ்பூன் 
மல்லி தூள் 1/2 ஸ்பூன் 
தண்ணீர் 3 கப் 
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 

இட்லி தோசைக்கு மாற்றாக ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட்! இப்படி செஞ்சு பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது.

How to cook Chettinad Paneer Masala in Tamil

செய்முறை :
ஒரு வானொலியில் எண்ணெய் சேர்க்காமல் மேற்கூறிய மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். இளஞ்சூட்டில் அனைத்தையும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின் துருவிய தேங்காயை சேர்த்து மீண்டும் வறுக்கவும்.   பின் அடுப்பை ஆப் செய்து விட்டு இந்த மசாலாபொருட்களை நன்கு ஆற வைத்து விட்டு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது மசாலா ரெடி. 

ரோட்டு கடை இட்லி தோசை குருமா! இப்படி குருமா வச்சு பாருங்க. 10 இட்லி கூட சாப்பிடலாம்!

பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி  பிரியாணி இலை , சோம்பு,  சீரகம் , கருவேப்பிலை சிறிது சேர்த்து  தாளிக்கவும் . அடுத்து வெங்காயம், பூண்டு, இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை  நன்கு வதக்கவும்.  அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் , மல்லி தூள் , உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வரை  நன்கு வதக்கவும்.

பின் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை  வதக்கவேண்டும்.பின்  அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து எண்ணெய் திரியும் வரை  நன்கு வதக்கி விட வேண்டும். பின் 3 கப் தண்ணீர் சேர்த்து கெட்டியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இதனுடன் பன்னீரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மூடி இட்டு  சுமார் 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும் .  இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி தழையை சேர்த்தால்  சுவையான செட்டிநாடு பன்னீர் மசாலா ரெடி. ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios