Asianet News TamilAsianet News Tamil

10 நிமிடத்தில் ருசியான சீஸ் மக்ரோனி செய்யலாமா!

சூப்பரான ருசியான சீஸ் மக்ரோனியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

How to Cook Cheese Macaroni in Tamil
Author
First Published Nov 27, 2022, 2:33 PM IST

தினமும் இட்லி, தோசை,பூரி, பொங்கல் என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்படியென்றாலும் இந்த பதிவு உங்களுக்காக தான். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்து தரும் படி கேட்கிறார்களா? 

அப்படியெனில் இந்த சூப்பரான மக்ரோனி ரெசிபியை செய்து கொடுங்கள். மக்ரோனியை வைத்து சீஸ் மக்ரோனி, மசாலா மக்ரோனி, கீமா மக்ரோனி என பல விதங்களில் செய்யலாம்.  அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சீஸ் மக்ரோனியை பார்க்க உள்ளோம். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள்,குறிப்பாக குழந்தைகள் சத்தம் மில்லாமல், ஒரே இடத்தில அமர்ந்து சாப்பிட்டு விட்டு தான் அடுத்த வேலைக்கே செல்வார்கள். 

சூப்பரான ருசியான சீஸ் மக்ரோனியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

மக்ரோனி -1/4 கிலோ 
பட்டர்-3 ஸ்பூன் 
கேப்ஸிகம்-1 (பொடியாக அரிந்தது )
தக்காளி-2 
பூண்டு - 4 
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 ஸ்பூன் 
சீஸ் -3 ஸ்பூன் (துருவியது)
டொமேட்டோ கெட்சப்- 2 ஸ்பூன் 
ஆரிக்கனோ-1 ஸ்பூன் 
எண்ணெய்-தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

ருசியான மிளகு பூண்டு சாம்பார் !இப்படி செய்து பாருங்க-அருமையாக இருக்கும்

செய்முறை: 

முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து தண்ணீர் ஊற்றிகொண்டு,அதில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பின்பு, மக்ரோனி மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும். 

அடுப்பின் தீயை அதிகமாக வைத்துக் கொண்டு, 2 விசில் வைத்து மக்ரோனியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் அடங்கிய பிறகு, குக்கர் திறந்து,மக்ரோனியை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு , அந்த தண்ணீரில் வெந்த மக்ரோனியை போட்டுக் கொள்ள வேண்டும். 

சிறிது நேரம் கழித்து மக்ரோனியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 1 மிக்ஸி ஜாரில் ஆரிக்கனோ ,தக்காளி ,பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து விட்டு, நன்றாக வதக்கி விட வேண்டும். கலவை நன்கு வதங்கிய பிறகு, டொமேட்டோ கெட்சப் சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். 

பிறகு இந்த கலவையில் வேக வைத்து எடுத்துள்ள மக்ரோனி,கேப்ஸிகம்,சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு இறுதியாக துருவிய சீஸ் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சீஸ் மக்ரோனி ரெடி!
 

Follow Us:
Download App:
  • android
  • ios