மூட்டுவாதம் இருக்கா? அப்ப வாரத்திற்கு 2 முறையாவது இந்த தோசையை சுட்டு சாப்பிடுங்க..ரொம்ப சத்து!
Mudakathan Keerai Dosai Recipe : இந்த கட்டுரையில் முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தோசை செய்து கொடுக்கப் போகிறீர்கள் என்றால், வித்தியாசமான சுவையில், சத்தான தோசை செய்து கொடுங்கள். அப்படி என்ன செய்வது என்று தெரியவில்லை உங்களுக்கான பதிவு தான் இது. உங்க வீட்டில் முடக்கத்தான் கீரை இருந்தால் அதில் தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. மேலும், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும்.
முடக்கத்தான் கீரை நன்மைகள் :
- கை கால் மூட்டு வலி போன்ற வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- முதுகெலும்பு தேய்மானம், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானம், மூட்டுவாதம், மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- மூல நோய் மலச்சிக்கல் பக்கவாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
- மூளை ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.
சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 2 கைப்பிடி முருங்கைக் கீரை போதும்.. சத்தான தோசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - 2 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: இன்னைக்கும் அரிசி மாவு தோசை தான் சுட போறீங்களா? ஒருமுறை இந்த தோசை சுட்டு பாருங்க.. சுவையா இருக்கும்!
செய்முறை :
முடக்கத்தான் தோசை செய்யும் முதலில், எடுத்து வைத்த கீரையை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கி சுமார் 7 மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஊற்றவும். தோசையின் ஓரங்களை சுற்றி எண்ணெய் விடுங்கள். அப்போதுதான் தோசை சாப்பிடுவதற்கும் மொறுமொறுப்பாக இருக்கும். பிறகு தோசை இரண்டு பக்கமும் நன்கு பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால், சத்தான முடக்கத்தான் தோசை ரெடி. இந்த தோசைக்கு நீங்கள் காரச் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D