2 கைப்பிடி முருங்கைக் கீரை போதும்.. சத்தான தோசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!
Murungai Keerai Dosai Recipe : முருங்கைக் கீரை வைத்து தோசை சுலபமாக செய்வது எப்படி என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் இன்று காலை தோசை சுட போறீங்களா? எப்போதும் ஒரே மாதிரியாக சுடாமல் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்து கொடுங்கள். அப்படி என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது.
உங்கள் வீட்டில் முருங்கை மரம் இருந்தால், முருங்கைக் கீரையை வைத்து சத்தான தோசை செய்து கொடுங்கள். பொதுவாகவே வாரத்திற்கு இரண்டு முறையாவது கண்டிப்பாக முருங்கைக்கீரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை முருங்கை கீரை வைத்து தோசை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் முருங்கைக் கீரை வைத்து தோசை சுலபமாக செய்வது எப்படி என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: தோசை மாவு இல்லையா? அப்ப ரவையும் தேங்காயும் வச்சு இப்படி ஒருமுறை தோசை சுட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கும்!
முருங்கை கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
தோசை மாவு - 2 கப்
பூண்டு - 2 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: மீல் மேக்கரில் இப்படி ஒரு முறை தோசை சுட்டு சாப்பிடுங்க ... அடிக்கடி செய்வீங்க!
செய்முறை :
முருங்கைக்கீரை தோசை செய்ய முதலில் முருங்கைக் கீரையை உரித்து, பிறகு அதை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் மிளகுத்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு இதில் முருங்கைக்கீரை போட்டு சுமார் 2 நிமிடம் வதக்கவும். முருங்கைக்கீரை சுருங்கியவுடன் தேவையான உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இவற்றை ஒரு தட்டில் தட்டி ஆற வைக்கவும். அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது எடுத்து வைத்த தோசை மாவுடன் அரைத்து வைத்த இந்த பேஸ்டை நன்கு கலக்கவும்.
இப்போது தோசை சுடுவதற்கான காலை, அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை கல்லில் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும் அவ்வளவுதான். சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை தோசை ரெடி. இந்த தோசையுடன் நீங்கள் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, காரச்சட்னி ஆகியவற்றுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D