Asianet News TamilAsianet News Tamil

காலை டிபனுக்கு மொறு மொறுன்னு டேஸ்டான சிறுதானிய தோசை.. ரெசிபி இதோ!

Millet Rava Dosai Recipe : இந்த கட்டுரையில் சிறுதானிய ரவா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

healthy and tasty millet rava dosai recipe in tamil mks
Author
First Published Aug 30, 2024, 6:30 AM IST | Last Updated Aug 30, 2024, 6:30 AM IST

தினமும் காலை அரிசி மாவு தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், ஆரோக்கியமான முறையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் சிறுதானியங்களும் ரவையும் இருக்கிறதா? அப்படியானால் அதில் முறுமுறுப்பான தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், செய்வதற்கு எளிதாகவும் இருக்கும். முக்கியமாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் சிறு தானிய ரவா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  2 கைப்பிடி முருங்கைக் கீரை போதும்.. சத்தான தோசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!

சிறுதானிய ரவை தோசை செய்ய தேவையான பொருட்கள் :

ரவை - 200 கிராம்
சிறுதானிய மாவு - 150 கிராம் 
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  மீல் மேக்கரில் இப்படி ஒரு முறை தோசை சுட்டு சாப்பிடுங்க ... அடிக்கடி செய்வீங்க!

செய்முறை :

சிறுதானிய ரவை தோசை செய்ய முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் ரவை, சிறுதானிய மாவு தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, துருவிய இஞ்சி, இடித்த மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும் முக்கியமாக கட்டிகள் இன்றி கலக்கவும். பிறகு அதை சுமார் 15 நிமிடம் மூடி ஊற வைக்கவும். பிறகு மீண்டும் மாவை ஒரு முறை கிளறி விடுங்கள். 

இப்போது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி கரைத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுத்தால் மொறுமொறுப்பான சுவையான சிறுதானிய ரவை தோசை ரெடி. இந்த தோசையுடன் நீங்கள் கார சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios