பச்சை பட்டாணி ஃபிரீசரில் வைக்கலாமா? கூடாதா?
பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. அதாவது உலர்ந்த பட்டாணி உடம்புக்கு நல்லதா? ஃபிரீசரில் வைத்திருக்கும் பச்சை பட்டாணி சத்தானதா? பிரஷ்ஷாக செய்வது நல்லதா? போன்ற பல்வேறு கேள்விகள் எழக் கூடும்.
பச்சை பட்டாணி சத்தானது. உடம்புக்கு நல்லது. ஆனால், பலரும் அதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். செடியில் இருந்து உடனடியாக பறித்து சமைத்து சாப்பிட்டால்தான் சத்து அதிகமாக கிடைக்கும் என்று கூறுவது உண்டு. ஆனால் நாம் எங்கே போவது அப்போதே பறித்து அப்போதே சமைத்து சாப்பிடுவதற்கு. அதனால் சந்தையில் கிடப்பதை வாங்கி சமைக்கிறோம். அதனால் பலன் இருக்கிறதா எஎன்று பார்க்கலாம்.
ஃபிரஷ் பட்டாணி:
பிரஷ்ஷாக பச்சை பட்டாணி கிடைக்கிறது என்று வாங்கி சுத்தம் செய்து சிலர் ஃபிரீசரில் வைத்து விடுவார்கள். ஆனால், அப்படி செய்வதால் ஏதாவது பலன் இருக்கிறதா? ஃபிரஷ்ஷாக இருக்கும் பட்டாணி ஓரிரு நாட்களில் சத்தை இழந்துவிடும். இதையே நீங்கள் ஃபிரிட்ஜில் ப்ரீஸ் செய்து வைத்து விட்டால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து சமைக்கலாம். சத்து அப்படியே இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபிரிட்ஜில் வைத்த பட்டாணி:
சில நேரங்களில் செடியில் இருந்து சரியான நேரத்தில் பறிப்பதற்கு முன்பாகவே பட்டாணியை பறித்து விடுகின்றனர். அப்படி பறிக்கப்படும் பட்டாணி இளம்பாக இருக்கும். சரியான பருவத்தில் பறிக்கப்பட்டதாக இருக்காது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
Frozen செய்யலாமா?
தாராளமாக பட்டாணியை சரியாக சுத்தம் செய்து, கன்டெய்னர் அல்லது கவரில் போட்டு ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் போட்டு வைக்கலாம். இப்படி செய்தால் சத்து வீணாகாது. ஆனால், அப்படியே வைத்து மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதில் சத்து இருக்காது.
பட்டாணி எப்போது கிடைக்கும்:
பச்சைப் பட்டாணி குளிர்காலத்தில் உற்பத்தியாகும். ஆனால், ஆண்டு முழுவதும் கிடைக்கும். அப்படி கிடைப்பது ஃபிரீசரில் வைக்கப்பட்டதாக இருக்காது. காய வைத்து இருப்பார்கள் அல்லது காயவைத்து பச்சை வர்ணத்தில் ஊறவைத்து எடுத்து இருப்பார்கள். இதை வாங்கக் கூடாது. சீசனில் கிடைக்கும் சமயங்களில் வாங்கி ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.
ஃபிரீசரில் வைக்கப்பட்ட பட்டாணி தீமைகள்:
1. ஃபிரீசரில் பட்டாணி பாதுகாப்பாக வைக்காவிட்டால், கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஃபிரிட்ஜ் ஆஃப் செய்யக் கூடாது.
2. வணிக ரீதியாக கிடைக்கக்கூடியவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. மளிகைக் கடைகளில் நீங்கள் வாங்கும் பட்டாணிகள், கூடுதல் மாவுச்சத்து மற்றும் குறைவான சத்துள்ளவையாக மாற்க்கூடியவை. இது சாப்பிட்டால் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
3. ஜீரணத்தை பாதிக்கலாம். ஃப்ரீசரில் வைத்த பட்டாணியை சமைப்பதற்கு முன்பு சிறிது நேரம் எடுத்து வெளியே வைக்க வேண்டும். அதில் இருக்கும் குளிர்ச்சி முற்றிலும் போக வேண்டும். இல்லையென்றால் ஜீரணம் பாதிக்கப்படும்.