Sweet potatoes: சர்க்கரை வள்ளி கிழங்கில் ஒளிந்திருக்கும் அற்புத ஊட்டச்சத்துக்கள்...!!
சர்க்கரை வள்ளிகிழங்கில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். .
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அது நம் உடலுக்கு பல வகையான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் மிக குறைந்த அளவே கொழுப்பு நிறைந்துள்ளது. இது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
- இந்த தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் 'ஏ' சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். மேலும் இதில் தேவையான அளவு வைட்டமின் 'சி'யும் உள்ளது.
- இதில் பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும் இது இதய நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது.
- இது இரத்த அணுக்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்க மிகவும் உதவுகிறது.
- சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற வழிவகுக்கிறது.
- இதில் வைட்டமின் டி-யும் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் டி,
- ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதுமட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- சர்க்கரைவள்ளி கிழங்கு வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும் இது சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்துகிறது.
- சர்க்கரை வள்ளி கிழங்கை நீங்கள் வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் ஆக செய்தோ சாப்பிட்டால் அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உங்களுக்கு முழுவதும் கிடைக்கும்.
இதையும் படிங்க: சக்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா?சக்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா?