பேரிச்சம்பழத்தை பாலுடன் ஊற வைத்து சாப்பிடும்போது பல்வேறு மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன.
இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் பேரிச்சம்பழம் உண்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை தவிரவும் பல நோய்களை போக்கும் வல்லமை பேரிச்சம்பழங்களுக்கு உண்டு. அதை அப்படியே சாப்பிடுவதை விட பாலில் ஊற வைத்து எடுத்து கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அந்த பாலை அருந்தும்போது அளவில்லா பலன்களை அனுபவிக்கலாம்.
பேரிச்சம்பழத்துடன் பாலும் தேனும்!
பேரிச்சம்பழத்தை ஊற போட்ட பாலை தேன் விட்டு அருந்தும்போது நாள்பட்ட இருமல் குணமாகும். கொதிக்கும் பாலில் சில பேரிச்சம் பழங்களை போட்டு மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டை இதமாகும். அதிகமான இதயத் துடிப்பு, இதய பிரச்சனை கூட சரியாகும்.
மூன்று நோய்களுக்கு ஒரே தீர்வு!
இரத்த சோகை, நரம்பு சார்ந்த நோய், விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய பேரிச்சம் பழத்திற்கு சக்தி உண்டு. முழு நாள் அல்லது இரவு மட்டும் பேரிச்சையை பாலில் ஊற வையுங்கள். அதனை மறுநாள் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். வாசனையும், நிறமும் வேண்டுமெனில் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி போடலாம்.
தூக்கத்திற்கு உதவும்!
தூக்கம் இல்லாமல் வேதனைப்படுபவர்கள் வெந்நீரில் பேரிச்சம் பழத்தை போட்டு குடிக்கலாம். பேரீச்சம்பழம் உண்பதால் கிடைக்கும் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரை உங்களை உற்சாகமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
இதையும் படிங்க: மருத்துவ நன்மைகளை வாரி வழங்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு!
குணமாகும் மலச்சிக்கல்!
பேரிச்சம் பழத்தை 500 மிலி பாலில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். காலை உணவுடன் சில பேரிச்சம் பழங்களை உண்பது நல்லது.
சுகர் இருந்தாலும் உண்ணலாம்!
பேரிச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கலாம். ஆகவே தினசரி 2 முதல் 3 பேரிச்சம்பழங்களை உண்ணலாம்.இதன் மூலம் பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
கட்டுக்குள் வரும் உயர் இரத்த அழுத்தம்
கொஞ்சம் பேரிச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு உண்ணுங்கள். மூன்று வாரம் இப்படி காலை வேளை செய்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். பிரசவித்த பெண்கள் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழங்களை தொடர்ந்து உண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. தாய்ப்பால் சுரப்பும் அதிகமாகும்.
இதையும் படிங்க: அதிகமாக கொட்டாவி விடுவது ஆபத்து.. உடல் பேசும் மொழியை கேளுங்கள்
Last Updated Jan 20, 2023, 4:59 PM IST
Dates Benefits
Dates Nutrition Benefits
Dates health Benefits
benefits of dates for men
benefits of dates for women
benefits of dates with milk at night
dates
dates benefits and side effects
dates benefits for men
dates benefits for skin
dates soaked in water overnight benefits
dates uses
dates with milk
dates with milk benefits
health news
how many dates to eat per day
top 10 health benefits of dates