கொய்யா இலைகள் உடல் எடையை குறைக்குமா? அட! என்னங்க இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கு!

Guava Leaves For Obesity: கொய்யா இலைகளை பயன்படுத்தி உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

guava leaves benefits in tamil

Guava Leaves For weight loss: கொய்யா பழத்தின் சுவை யாருக்குத்தான் பிடிக்காது. கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் கொய்யாவும் ஒன்று. கொய்யா பழம் உண்ணும்போது உடல் எடை குறைப்பு முதல் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த பழத்தின் இலைகளை உட்கொள்வது அல்லது இந்த இலையிலிருந்து தேநீர் தயாரித்து குடிப்பது உடலுக்கு பல நன்மைகள் செய்கின்றன. 

கொய்யா இலைகளில் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மிகுந்துள்ளன. இதில் காணப்படும் வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும். கொய்யா இலைகள் பல நோய்களுக்கு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

ஆய்வு முடிவுகள் 

கொய்யா இலையில் தேநீர் தயாரித்து அருந்துவது அல்லது கொய்யா இலைகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும் என்று இதுவரை வெளியிடப்பட்ட ஆய்வுகள் எதுவும் நிரூபணம் செய்து காட்டவில்லை. கொய்யா இலைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் இந்த ஆய்வுகள் எலிகள் மீது செய்யப்பட்டன. இதை மனிதர்களுக்கு அப்படியே பொருத்தி பார்க்க முடியாது. கொய்யா இலைகள் நேரடியாக எடை குறைப்பதில் ஈடுபடாது. 

எடை இழப்பு உண்மையா?  

கொய்யா இலைகளில் காணப்படும் கேடசின்கள், குர்செடின், கேலிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதன் மூலம் எடை இழப்பை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. 

இதையும் படிங்க: படிக்கட்டுகளில் ஏறுவதால் கிடைக்கும் பயன்கள்!

மூலிகை தேநீர்

கொய்யா இலைகள் எடை இழப்புக்கு பங்களிக்கின்றன என்று எந்த அறிவியல் ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் வெள்ளைச் சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். காலையில் கொய்யா இலை தேநீர் உள்ளிட்ட சர்க்கரை கலக்காத மூலிகை தேநீர் எடை இழப்பில் உதவும். 

Guava Leaves benefits Guava Leaves tea

கொய்யா இலை டீ செய்முறை 

தேநீர் தயாரிக்க 5 முதல் 10 கொய்யா இலைகளை கழுவி எடுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அதில் கழுவிய கொய்யா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் நிறம், சுவைக்காக ½ தேக்கரண்டி தேயிலை சேர்க்கலாம். எல்லாம் 10 நிமிடம் கொதித்த பின்னர் வடிகட்டி அருந்தலாம். இனிப்பு சுவை வேண்டுமெனில் தேன் அல்லது வெல்லம் சேர்க்கலாம். 

இதையும் படிங்க: சம்மரில் லிச்சி பழம் சாப்பிட்டு பாருங்க! தித்திப்பு சுவையுடன் ஏராளமான அற்புத நன்மைகள் இருக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios