health
படிக்கட்டுகளில் ஏறுவதும், இறங்குவதும் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் தருகிறது.
படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளை வலுவாக மாற்றும். கால், தொடை, இடுப்பு தசைகளின் வலிமையை மேம்படுத்தலாம்.
படிக்கட்டுகளில் ஏறுவது நம் எலும்புகளை வலுவாக்கும். மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைத்து அவற்றை நெகிழ்வாக மாற்றும்.
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதால் எடை கட்டுக்குள் இருக்கும்.
தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறுவது உடற்பயிற்சியின் பலன்களை தரும். இதனால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
படிக்கட்டுகளில் ஏறுவதால் வளர்சிதை மாற்றம் அதிகமாகும். இதனால் சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கலாம்.
படிக்கட்டுகளில் ஏறுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
படிக்கட்டுகளில் ஏறினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். நம்முடைய கால்களின் திறனும் அதிகரிக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க, தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை பழக்கமாக்குங்கள்.